லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின்… Continue reading இதழ்: 978 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளும் தேவன்!
Tag: இரட்சிப்பு
இதழ்: 964 நம்மை மாற்ற வல்ல உறவு!
ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு மல்லிகைக் கொடி படர்ந்து உள்ளது. அதில் உள்ள இரண்டு வகை மல்லிகைக் கொடிகள் தானாகவே ஒன்றோடு ஒன்று சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. இப்பொழுது அந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது என்பது போல உள்ளது. அதில் ஒன்று ரோஜாவைப்போல பூக்கும் பெரிய மல்லிகை வகை. எப்பொழுதாவது ஒரு பெரிய பூ தனியாகக் கண்ணில் படும்போதுதான்… Continue reading இதழ்: 964 நம்மை மாற்ற வல்ல உறவு!
இதழ்: 963 ஒளியாய் பிரகாசித்த ஒரு பெண்!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமி தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த… Continue reading இதழ்: 963 ஒளியாய் பிரகாசித்த ஒரு பெண்!
இதழ்: 858 இரட்சிப்பின் அடையாளமான ஒரு கயிறு!
யோசுவா: 2: 17 ” அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி….” இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் எரிகோவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி யாராவது புதிய மனிதர் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டார்களா என்று விசாரித்தான். உடனடியாக சிந்திக்கும் திறன் கொண்ட ராகாப், அந்த இருவரையும் தன் வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு,… Continue reading இதழ்: 858 இரட்சிப்பின் அடையாளமான ஒரு கயிறு!
இதழ்: 786 ஒரு புத்திசாலியானப் பெண்ணின் குரல்!
2 சாமுவேல் 14: 1- 4 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து...நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு.... ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய் சொல்..... அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள… Continue reading இதழ்: 786 ஒரு புத்திசாலியானப் பெண்ணின் குரல்!
இதழ்: 676 எதிர்பார்த்தல் 3: திடமான குணம்!
எபிரேயர் 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள். அப்படிப்பட்ட திடமான மெஷினை விட திடமான ஒரு உறவை நாம்… Continue reading இதழ்: 676 எதிர்பார்த்தல் 3: திடமான குணம்!
