ஆதி: 27:13 “அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.” யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசீர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள். ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள சாராள் அவசரப்பட்டு ஆகாரை… Continue reading இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!
Tag: ஈசாக்கு
இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
ஆதி: 26 :27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அதற்கு சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம் என்றுதானே அர்த்தம்! சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட… Continue reading இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
ஆதி: 25: 20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர்… Continue reading இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
ஆதி:25:1 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்” நான் தற்போது கர்த்தர் கொடுத்த அதிக நேரத்தைப்பயன்படுத்தி டாலஸ் தியாலாஜிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆதியாகம புத்தகத்தைப் படிக்கும்போது அதின் பேராசிரியர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களில் விசுவாசத்தில் சிறந்தவர் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். வேதாகமத்தைப் படித்தால் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் சிறந்திருந்தவன் யோசேப்பே என்று கூற முடியும். ஆனால் ஆபிரகாம் அல்லவா விசுவாசத்தின் தந்தை… Continue reading இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
ஆதி:24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனையாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். நம்முடைய முற்பிதாக்களான ஆபிரகாம், சாரளுடைய காலம் வேகமாய்க் கடந்தது. ஆதியாகமம் 23 ம் அதிகாரத்தில் சாராள் 127 ம் வயதில் மரித்துப் போவதையும் அவளை அடக்கம் பண்ண ஆபிரகாம் ஒரு நிலத்தை வாங்குவதையும் பற்றிப் படிக்கிறோம். ஈசாக்கு வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டான்! ஆதி 24 ம் அதிகாரம் நமக்கு ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில்… Continue reading இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘… Continue reading இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
இதழ்: 806 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்பட்டான்!
ஆதி: 29:21 “ பின்பு யாக்கோபு லாபானை நோக்கி, என் நாட்கள் நிறைவேறினபடியால் என் மனைவியினடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தர வேண்டும் என்றான்.” சில தினங்களுக்கு முன்பு நாம் ரெபெக்காள் சதி திட்டம் தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசிர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்தோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி… Continue reading இதழ்: 806 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்பட்டான்!
