I சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 38 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து பயனடைகின்றனர். உங்கள் அனைவருக்கும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி… Continue reading இதழ்:1282 கடவுள் உன் தேவைக்காக உபயோகப்படுத்தும் பொருள் அல்ல!
Tag: உடன்படிக்கை பெட்டி
இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!
2 சாமுவேல்: 6:12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். 2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல்,… Continue reading இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!
இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!
2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்! தாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா.… Continue reading இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!
