யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.” இன்று பார்வோன் குமாரத்தியைப் பற்றி சற்று சிந்திக்கலாம்! மோசே பிறந்த போது யார் பார்வோனாக இருந்தார் என்பதைக் குறித்து பல கேள்விகள் உள்ளன! பார்வோன் குமாரத்தியின்… Continue reading இதழ்: 1048 மோசேயை நமக்களித்த ஒரு தாய்!
Tag: எகிப்து
இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால்… Continue reading இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!
இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
ஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்ற பின் யூதா, தாமார் என்ற இருவரின் கதை வேதத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். இன்று நான் யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! என்றுமே… Continue reading இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
ஆதி: 18:16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை… Continue reading இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் .... என்றாள். மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான… Continue reading இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம்… Continue reading இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “. தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலாம்? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி?… Continue reading இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
இதழ்: 837 தலைக்கு வந்த ஆபத்து கீழ்ப்படிதலால் போனது!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை. பல கனவுகளோடு அவள்… Continue reading இதழ்: 837 தலைக்கு வந்த ஆபத்து கீழ்ப்படிதலால் போனது!
இதழ்: 826 ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உண்டா?
யாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த ஆண்பிள்ளைகளை நதியில் போட்டுவிட… Continue reading இதழ்: 826 ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உண்டா?
