உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் முதன்முறை இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது நாங்கள் இருவரும் தனியாகவே சென்றோம். எந்த ஒரு குழுவோடும் சேர்ந்து செல்லவில்லை. அப்பொழுது கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்படுமுன்னர் முழங்கால் படியிட்டு இரத்தம் வேர்வையாக சிந்த ஜெபித்த ஒலிவ மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது… Continue reading இதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு!
Tag: கன்மலை
இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன். ஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர்,… Continue reading இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
இதழ்: 918 வார்த்தைகளின் விளைவு!
நியாதிபதிகள் 11:31 “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”. ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்! பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான்… Continue reading இதழ்: 918 வார்த்தைகளின் விளைவு!
இதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.” நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும்… Continue reading இதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்!
இதழ்: 843 தடுக்கி விழுந்தாலும் விட்டு விடாதே!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து...” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்: 843 தடுக்கி விழுந்தாலும் விட்டு விடாதே!
இதழ்: 842 மோசே அறிந்த கன்மலை!
உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் இஸ்ரவேலில் கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி எங்கள் இருவரையும் படம் எடுத்ததுமட்டுமல்லாமல்,… Continue reading இதழ்: 842 மோசே அறிந்த கன்மலை!
