நியா: 4: 18 "யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்...." நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டே பெயர்களை தெரிந்தெடுக்கிறோம். இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்! யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? சில வருடங்களுக்கு முன்னால் இந்த… Continue reading மலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு !
Tag: குடும்ப தியானம்
God can change your impossibilities today!
This evening I was reading I Samuel 23, where David was told by God that he was the chosen leader of Israel. But very much like Moses who waited eighty years to really be in the place God needed him, it took God some time to get David from the pasture into the palace. Patience… Continue reading God can change your impossibilities today!
மலர் 7 இதழ்: 458 நட்புடன் நுழைந்தான் சிசெரா!
நியா: 4: 17 "சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது." வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன! இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், " தலைப்புச் செய்திகள்... சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!"… Continue reading மலர் 7 இதழ்: 458 நட்புடன் நுழைந்தான் சிசெரா!
மலர் 7 இதழ்: 457 சிலந்தி வலை போன்ற பெலென்!
நியா: 4 : 16 " பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை." நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக் சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading மலர் 7 இதழ்: 457 சிலந்தி வலை போன்ற பெலென்!
மலர் 7 இதழ்: 456 நம் எதிரிகளைக் கலங்கடிப்பார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில் தான் உள்ளது என்பவை போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற… Continue reading மலர் 7 இதழ்: 456 நம் எதிரிகளைக் கலங்கடிப்பார்!
மலர் 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள். இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம். இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும்,… Continue reading மலர் 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்!
மலர் 7 இதழ்: 454 பாராக்! எழுந்திரு!
நியா: 4:14 "அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; " அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள். இதை வாசிக்கும்… Continue reading மலர் 7 இதழ்: 454 பாராக்! எழுந்திரு!
மலர் 7 இதழ் 453: கர்த்தருடைய காரியமாய் செல்ல தயக்கம் ஏன்?
நியாதிபதிகள் : 4: 9 "அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்..... என்று சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading மலர் 7 இதழ் 453: கர்த்தருடைய காரியமாய் செல்ல தயக்கம் ஏன்?
மலர் 7 இதழ்: 452 பனித் துளிகள் பனிக்கட்டியாவது போல!
நியாதிபதிகள் : 4 : 8 "அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. என்னுடைய 35 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும், நானும் என் கணவரும் சேர்ந்து, இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட்… Continue reading மலர் 7 இதழ்: 452 பனித் துளிகள் பனிக்கட்டியாவது போல!
மலர் 7 இதழ்: 451 நம் மண்ணில் கூட தெபோராக்கள் உண்டு!
நியாதிபதிகள்: 4:5 " அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்." இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார். இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று… Continue reading மலர் 7 இதழ்: 451 நம் மண்ணில் கூட தெபோராக்கள் உண்டு!
