1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. என்னுடைய வாழ்க்கையில் என்றாவது நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்கு இதை வாசித்தவுடன் வந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.! ஒருவேளை உங்கள் கணவர் உங்களை கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப் பட்டு தூக்கி… Continue reading மலர் 7 இதழ்: 558 ஒரு உதவாக்கரை வாழ்க்கையா?
Tag: குடும்ப தியானம்
மலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள். தமிழில் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்னும் பழமொழி ஒன்று உண்டு. நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம். பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணிரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும். இங்கு தான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில்… Continue reading மலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை!
மலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன?
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால் இப்படி வாழ்வது என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியாது. ஆனால் பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading மலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன?
மலர்7 இதழ்: 555 ஒருவனுக்கு ஒருத்தி தானே!
1 சாமுவேல்: 1: 1, 2 "எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;" இன்று நான் நகோமி, ரூத், போவாஸ் இவர்களின் குடும்பத்தை விட்டு, எல்க்கானா, அன்னாள், சாமுவேல் என்பவர்களின் குடும்பத்துக்குள் நுழையப் போகிறோம். ஆண் பெண் என்ற பாகுபாடு அதிகமாக ஆட்டம்… Continue reading மலர்7 இதழ்: 555 ஒருவனுக்கு ஒருத்தி தானே!
மலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். தேவனுடைய பிள்ளைகளே! தேவ ஆவியானவருடைய வழிநடத்துதலால் இன்று இதை எழுதுகிறேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த இரவில் உணவு அருந்தி விட்டு ஸ்தோத்திரப் பாட்டைப் பாடிய பின்னர் அவர்கள் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.… Continue reading மலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை!
மலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்!
ரூத்: 4: 16 "நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்." வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. முதல் முறையாக வானவில்லைப் பார்த்த… Continue reading மலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்!
மலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை!
ரூத்: 3: 18 " அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 - 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading மலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை!
மலர் 7 இதழ்: 551 ஒரே வாய் ஆனால் இரண்டு செவிகள்!
ரூத்: 1:18 "அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை." நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட " நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்" என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது. என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடன் வேலை செய்த… Continue reading மலர் 7 இதழ்: 551 ஒரே வாய் ஆனால் இரண்டு செவிகள்!
மலர் 7 இதழ்: 550 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!
ரூத்: 2: 10 "அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்". ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading மலர் 7 இதழ்: 550 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!
மலர் 7 இதழ்: 549 கடைசிவரை தரித்திரு!
ரூத்: 2: 21 "பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்." நாம் ரூத்தின் குணநலன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர்… Continue reading மலர் 7 இதழ்: 549 கடைசிவரை தரித்திரு!
