ஆதி: 16:5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள். மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம். இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு! ஆதி:16: 4 கூறுகிறது, “… Continue reading இதழ்: 1003 காற்றில் பறந்து விட்ட சாட்சி!
Tag: சாராய்
இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
ஆதி 16:4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாய் எண்ணினாள். நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம். கர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால்… Continue reading இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் .... என்றாள். மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான… Continue reading இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
ஆதி 16:1 எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஓர் அடிமைப்பெண் அவளுக்கு ( சாராய்க்கு) இருந்தாள். தேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது. சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும்,… Continue reading இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
நீதி:12:19 சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். ஆபிராம் அழைக்கப் பட்டது கானானுக்குள் பிரவேசிக்கத்தான்! தங்களுக்கு இருந்த அத்தனை சொத்து சுகங்களை விட்டு விட்டுத்தான் அந்தக் குடும்பம் புறப்பட்டனர். பஞ்சம் வந்தவுடன் யார் அவர்களை வழி நடத்துகிறார் என்று மறந்தே… Continue reading இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
இதழ்:996 தேவனுடைய திட்டத்தில் நீ ஒரு உன்னத பாத்திரம்!
ஆதி 11:30 சாராய்க்கு பிள்ளையில்லை. மலடியாயிருந்தாள் என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சம்பவம் தான் அல்லவா? இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம், சாராய் என்ற பெண்ணை மணக்கிறான்… Continue reading இதழ்:996 தேவனுடைய திட்டத்தில் நீ ஒரு உன்னத பாத்திரம்!
