ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:1577 எத்தனை மா தயவு! எத்தனை ஆச்சரியம்!
Tag: தாமார்
இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!
2 சாமுவேல் 14:27 அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர் கொண்ட குமாரத்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவதியான் பெண்ணாயிருந்தாள். கடந்த சில நாட்கள் நாம் அம்னோன் தாமார் என்ற தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தாமாரைப்போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் நம்மில் உண்டு! அவர்களுக்கு தாமாரின் வாழ்க்கை என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று சற்று ஆழமாகப் படிக்கும்போதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு செழிப்பூட்டிய சில உண்மைகளைப் பார்த்தேன். தாமாரைப்பற்றி அதிகம் படிக்க எனக்கு ஆசை வந்ததின் காரணம்… Continue reading இதழ்:1490 வாழ்க்கையே ஒரு ஏற்பாடு என்ற புத்தகம்தான்!
இதழ்:1325 இயேசுவின் பிறப்பு வெளிப்படுத்திய மாதயவு!
ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:1325 இயேசுவின் பிறப்பு வெளிப்படுத்திய மாதயவு!
இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.” அன்பானவர்களே! நாம் தாமாரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.… Continue reading இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
ஆதி: 38:16 ( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள். தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். இந்த திம்னா என்ற ஊர் எபிரோனுக்கு தெற்காக ஏழு மைல் தூரத்தில் இருந்தது. ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம்… Continue reading இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
இதழ்: 1032 ஒரு முகத்திரைக்குப் பின்னால்…..
ஆதி: 38:14,15 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து... நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து கொண்ட விதத்தை… Continue reading இதழ்: 1032 ஒரு முகத்திரைக்குப் பின்னால்…..
இதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி!
ஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.” நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த… Continue reading இதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி!
இதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா?
நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்” ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து… Continue reading இதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா?
இதழ்: 856 இனி கடந்த காலத்தைப் பற்றிய கவலையேவேண்டாம்!
மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; யூதா பாரேசையும் சாராவையும் தாமாரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.” வேதத்தில் நாம்… Continue reading இதழ்: 856 இனி கடந்த காலத்தைப் பற்றிய கவலையேவேண்டாம்!
இதழ்: 816 குற்றம் சாட்டியதொரு விரல்!
ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.” அன்பானவர்களே! ஒருவேளை நீங்கள்… Continue reading இதழ்: 816 குற்றம் சாட்டியதொரு விரல்!
