1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள்… Continue reading இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!
Tag: தாவீது
இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
1 சாமுவேல் 25: 10-13 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?.... நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்… Continue reading இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
இதழ்: 633 நன்றியற்ற நாபால்!
1 சாமுவேல் 25: 5-8 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச் சொல்லி, .... இப்பொழுது ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள். அவர்கள் கர்மேலிலிருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை. அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும் அவர்கள் உமக்குச் சொல்வார்கள். வேதம் இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது. கர்மேலில் ஆடுகளுக்கு மயிர்க்கத்தரிக்கும் நேரம்… Continue reading இதழ்: 633 நன்றியற்ற நாபால்!
இதழ்: 631 வனாந்திரம் ஒரு பயிற்சி முகாம்!
1 சாமுவேல் 25:1,2 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான். மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடையத் தொழில்துறை கர்மேலில் இருந்தது.அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும், இருந்தது. அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது… Continue reading இதழ்: 631 வனாந்திரம் ஒரு பயிற்சி முகாம்!
இதழ்: 630 சத்துருவை சிநேகிப்பதால் என்ன நன்மை?
1 சாமுவேல் 24:19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. நாம் ஒவ்வொருநாளும் தாவீது வனாந்திரத்தில் சவுலினால் வேட்டையாடப் பட்டதைப் படித்துக் கொண்டு வந்தோம். தாவீதின் இந்த வனாந்திர வாழ்க்கையில் அவனுடைய இன்னொமொரு அற்புத குணாதிசயம் வெளிப்படுகிறது. கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைத்தது இதனால்தானோ என்னவோ! அவனைத் துன்பப்படுத்தினவர்களை நேசிக்கும் குணம்! கர்த்தராகிய இயேசுவின் குணமல்லவா… Continue reading இதழ்: 630 சத்துருவை சிநேகிப்பதால் என்ன நன்மை?
இதழ்: 629 வதந்தி என்ற விஷமுள்ள செடி!
1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? பொய்யான வதந்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரியவரும்போது எப்படியிருந்தது? சவுல் தாவீதை விரட்டி விரட்டி வேட்டையாடியதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு வந்தோம். அவன் சவுலுக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். கடைசியில் ஒருநாள் இரண்டு பேரும் சந்தித்தபோது தாவீது… Continue reading இதழ்: 629 வதந்தி என்ற விஷமுள்ள செடி!
இதழ்: 627 ஒருநொடியில் தோன்றிய ஒளி!
1 சாமுவேல் 23: 26 - 28 சவுல் மலைக்கு இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும், அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஓரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருவதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான். மூர்க்கமான சவுலால் ஈட்டியால் எறியப்பட்டவன்!… Continue reading இதழ்: 627 ஒருநொடியில் தோன்றிய ஒளி!
இதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்!
1 சாமுவேல் 22: 1, 2 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அங்கே ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள். அவன் அவர்களுக்குத் தலைவனானான். தாவீது அதுல்லாம் என்ற கெபியிலே ஒளிந்து கொண்டிருந்தான். அங்கே தாவீதின் குடும்பம் அவனை சந்தித்தது என்று பார்த்தோம். இன்றைய வேத வசனம் சொல்கிறது அவனைசுற்றி ஒரு கூட்டமே இருந்தது என்று! நானூறு பேர்! தாவீதின் இன்னொரு குடும்பமாக மாறிய இவர்களின் பெயர், ஒடுக்கப்பட்டவர்கள்! கடன்பட்டவர்கள்! முறுமுறுக்கிறவர்கள்!… Continue reading இதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்!
இதழ்: 625 எதிர்பாராத நாட்டில்!
1 சாமுவேல் 22: 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய் மேவாபின் ராஜாவைப் பார்த்து; தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் செல்லும் எல்லா கரடு முரடான பாதையிலும் நம்மோடு இருப்பார், நாம் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பாராத வேளையில் நம்மோடு இருந்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் கூடும் என்பதை இன்றைய… Continue reading இதழ்: 625 எதிர்பாராத நாட்டில்!
