2 சாமுவேல் 11: 12, 13 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்..... தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத்… Continue reading இதழ் 720 கட்டுப்பாடற்ற வாழ்க்கை!
Tag: தாவீது
இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!
2 சாமுவேல் 11:10 உரியா தன் வீட்டுக்குப்போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். என்னுடைய அம்மா நன்றாக லேஸ் பின்னுவார்கள். என்னையும் ஏதாவது ஒரு டிசைனைப் பின்பற்றி பின்னச் சொல்வார்கள். ஒருநாள் நான் பின்னிய போது ஒரு சிறு தவறு பண்ணிவிட்டேன். ஒரே ஒரு பின்னல்தானே விட்டு விட்டேன் ஒன்றும் ஆகாது என்று அதைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்தேன். அம்மா… Continue reading இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!
இதழ்: 718 சோதனையை சகிக்கிற மனுஷன்!
2 சாமுவேல் 11:9 ஆனாலும் உரியா தன் வீட்டுக்கு போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச்சேவகரோடுங்கூடப் படுத்துக் கொண்டிருந்தான். மீன்கள் கண்ணுக்கு படாத வரைக்கும் கொக்கு பரிசுத்தமாய் இருக்கும் என்று ஒரு வங்காள பழமொழி உண்டு. ஒருவேளை உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காமல் இருக்குமானால் ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ்கிரீம் உங்கள் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்றாலே நாக்கில் தண்ணீர் வருபவராக இருந்து ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் அதை சாப்பிடக்கூடாது என்று… Continue reading இதழ்: 718 சோதனையை சகிக்கிற மனுஷன்!
இதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க!!!!!!
2 சாமுவேல் 11:8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது. நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ ...... கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம். அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பதவியும்… Continue reading இதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க!!!!!!
இதழ்: 716 தந்திரமான வாய்!
2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள். நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து அவன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார். அந்த சீட்டை… Continue reading இதழ்: 716 தந்திரமான வாய்!
இதழ் 715 கள்ளத்தனத்துக்கு கூட்டாளி!
2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான். சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா? இதன் அர்த்தம் புரிகிறதா? நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது. பத்சேபாள்… Continue reading இதழ் 715 கள்ளத்தனத்துக்கு கூட்டாளி!
இதழ்:714 எல்லையைத் தாண்டி……
2 சாமுவேல் 11: 4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். அக்கிரமம் என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது. இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம்… Continue reading இதழ்:714 எல்லையைத் தாண்டி……
இதழ்: 713 பதவியும், பணமும் கொடுக்கும் தவறான கருத்து!
2 சாமுவேல்: 11:4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது. ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட, பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா? கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக… Continue reading இதழ்: 713 பதவியும், பணமும் கொடுக்கும் தவறான கருத்து!
இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே
2 சாமுவேல் 11: 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான். கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக்… Continue reading இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே
இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம். அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன் திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது. இந்த… Continue reading இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
