ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் .... என்றாள். மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான… Continue reading இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
Tag: திட்டம்
இதழ்: 958 உனக்காகத் திட்டமிடப்பட்ட பாதை!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading இதழ்: 958 உனக்காகத் திட்டமிடப்பட்ட பாதை!
இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். இந்த வருடத்தை நன்மையாக முடியப்பண்ணின கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரத்தோடு இதை வாசிப்போம்! யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும்,எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில்… Continue reading இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்!
