2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு… Continue reading இதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்!
Tag: நாத்தான்
இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது.… Continue reading இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!
இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி.... நீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1) என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான்… Continue reading இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?
இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது. இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை… Continue reading இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!
இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில்… Continue reading இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
இதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்!
2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது. ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன! என்ன செய்வதென்று அறியாது… Continue reading இதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்!
இதழ்: 739 இரக்கமுள்ள இதயம்!
2 சாமுவேல் 12: 3 தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. வேதம் எனக்கு மிகவும் பிரியமான புத்தகமாயிருப்பதின் காரணங்களில் ஒன்று வேதத்தில் காணும் நிஜ வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான்! ஏனெனில் அன்று அந்த… Continue reading இதழ்: 739 இரக்கமுள்ள இதயம்!
இதழ்: 737 நீ ஏழையா? அல்லது பணக்காரனா?
2 சாமுவேல் 12: 1 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே… Continue reading இதழ்: 737 நீ ஏழையா? அல்லது பணக்காரனா?
இதழ்: 736 கதையோடு வந்த நாத்தான்!
2 சாமுவேல் 12: 1-4 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்.… Continue reading இதழ்: 736 கதையோடு வந்த நாத்தான்!
இதழ் 735 கர்த்தர் உன்னை அழைத்தால்?
2 சாமுவேல் 12:1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி.... தாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான். இன்றைய வேதாகம வசனம் நமக்கு மூன்று காரியங்களை கூறுகிறது. அனுப்பினார், வந்து, நோக்கி என்ற வார்த்தைகளை கவனியுங்கள்! தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால் கர்த்தர்… Continue reading இதழ் 735 கர்த்தர் உன்னை அழைத்தால்?
