சங்கீதம் 38: 3,4 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று! தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ… Continue reading இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!
Tag: பத்சேபாள்
இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில்… Continue reading இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
இதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது!
2 சாமுவேல் 11:27 .... தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது. எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள் எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள். இங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக்… Continue reading இதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது!
இதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி!
1 சாமுவேல் 11: 26,27 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். கற்பு என்பது நமக்கும் அழகு! நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்! இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன… Continue reading இதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி!
இதழ் 721 ஷ்ஷ்! யாரும் பார்க்காத வேளை!
2 சாமுவேல் 11:14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். இன்றைய வேதாகமப்பகுதியைத் தொடர உதவிசெய்த கர்த்தரை மனமாரத் துதிக்கிறேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இந்த வேதாகம தியானத்தை வாசிக்கும் உலகத்தின் பல பாகங்களில் வாழும் என்னுடைய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி! ஒரு டெலிவிஷன் ஷோ பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறிவுப்பரீட்சை. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த பரீட்சையில் வரப்போகும் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்ட ஒரு கவர் அவர்கள் ஒவ்வொருவர்… Continue reading இதழ் 721 ஷ்ஷ்! யாரும் பார்க்காத வேளை!
இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!
2 சாமுவேல் 11:10 உரியா தன் வீட்டுக்குப்போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். என்னுடைய அம்மா நன்றாக லேஸ் பின்னுவார்கள். என்னையும் ஏதாவது ஒரு டிசைனைப் பின்பற்றி பின்னச் சொல்வார்கள். ஒருநாள் நான் பின்னிய போது ஒரு சிறு தவறு பண்ணிவிட்டேன். ஒரே ஒரு பின்னல்தானே விட்டு விட்டேன் ஒன்றும் ஆகாது என்று அதைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்தேன். அம்மா… Continue reading இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!
இதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க!!!!!!
2 சாமுவேல் 11:8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது. நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ ...... கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம். அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பதவியும்… Continue reading இதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க!!!!!!
இதழ்: 716 தந்திரமான வாய்!
2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள். நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து அவன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார். அந்த சீட்டை… Continue reading இதழ்: 716 தந்திரமான வாய்!
இதழ் 715 கள்ளத்தனத்துக்கு கூட்டாளி!
2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான். சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா? இதன் அர்த்தம் புரிகிறதா? நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது. பத்சேபாள்… Continue reading இதழ் 715 கள்ளத்தனத்துக்கு கூட்டாளி!
இதழ்:714 எல்லையைத் தாண்டி……
2 சாமுவேல் 11: 4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். அக்கிரமம் என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது. இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம்… Continue reading இதழ்:714 எல்லையைத் தாண்டி……
