ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான… Continue reading இதழ்: 970 இலையுதிர் காலம் கடந்து போய் உன் வாழ்க்கை மலரும்!
Tag: பெத்லெகேம்
இதழ்: 969 கன்மலையின் தேனினால் திருப்தியாவாய்!
ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading இதழ்: 969 கன்மலையின் தேனினால் திருப்தியாவாய்!
இதழ்: 958 உனக்காகத் திட்டமிடப்பட்ட பாதை!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading இதழ்: 958 உனக்காகத் திட்டமிடப்பட்ட பாதை!
இதழ்: 957 பொறுமையாயிரு! சந்தோஷமும் திருப்தியும் காத்திருக்கிறது!
ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம். பெண்களுக்கு பொதுவாகவே மனத் தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய… Continue reading இதழ்: 957 பொறுமையாயிரு! சந்தோஷமும் திருப்தியும் காத்திருக்கிறது!
இதழ்: 954 புயலைக்கண்டு பதறாதே!
ரூத்: 1 : 6 ” கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து” நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading இதழ்: 954 புயலைக்கண்டு பதறாதே!
இதழ்: 953 இன்று மேகமும் மந்தாரமுமா? நாளைக்கு வானவில் வரும்!
ரூத்: 1: 3 – 5 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது,… Continue reading இதழ்: 953 இன்று மேகமும் மந்தாரமுமா? நாளைக்கு வானவில் வரும்!
இதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா?
ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாகாணங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை பார்சல் பண்ணுவது, வீடு தேடி அலைவது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் தேடி அலைவது,… Continue reading இதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா?
இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “. தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலாம்? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி?… Continue reading இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
