ஆதி: 37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்” இந்தப் புதிய மாதத்தை நாம் காண உதவி செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த மாதம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிப்போம்! அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது… என்றெல்லாம் பிள்ளைகள்… Continue reading இதழ்:1030 மனிதர் நினைப்பதையா தேவனும் நினைக்கிறார்?
Tag: யோசேப்பு
இதழ்:1028 பென்…ஓ…னி என்ற வேதனையின் கதறல்!
ஆதி: 35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.” நேற்று நாம் ரெபெக்காளின் தாதி மரித்து… Continue reading இதழ்:1028 பென்…ஓ…னி என்ற வேதனையின் கதறல்!
இதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்!
ஆதி:32: 9-11 பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து… Continue reading இதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்!
இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
ஆதி: 25: 20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர்… Continue reading இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!
நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”. இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது. நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை… Continue reading இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!
இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே அவர்கள் பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1: 7, 8 கூறுகிறது, யோசேப்பும்,… Continue reading இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” நாம் கடந்த ஆண்டின் கடைசி நாளில், யோசேப்புக்கு இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று பார்த்தோம். இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால்… Continue reading இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். இந்த வருடத்தை நன்மையாக முடியப்பண்ணின கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரத்தோடு இதை வாசிப்போம்! யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும்,எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில்… Continue reading இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்!
இதழ்: 821 என்ன? ஒரு அவிசுவாசியா?
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். ஒருமுறை அமெரிக்காவில் , எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading இதழ்: 821 என்ன? ஒரு அவிசுவாசியா?
இதழ்: 820 நீர் என்னோடிருந்தால்…..
ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” Wishing all my family who visit this garden from various countries a VERY BLESSED CHRISTMAS! May the joy of Christmas fill your hearts! யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சில நாட்கள் நாம் தியானித்துக் கொண்டு இருக்கிறோம். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை… Continue reading இதழ்: 820 நீர் என்னோடிருந்தால்…..
