“விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபி:11:31) அந்தக்காலத்தில் டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவி என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி மேலே ஏறி அந்த அன்டெனாவை திருப்புவோம்,… Continue reading இதழ்:1125 ஆரம்பமாகி மறைந்து விடுவது அல்ல விசுவாசம்!
Tag: ராகாப்
இதழ்:1124 இரங்குதல் என்பது இரக்கத்தின் தேவனுக்கு கொடுக்கும் மரியாதை!
யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading இதழ்:1124 இரங்குதல் என்பது இரக்கத்தின் தேவனுக்கு கொடுக்கும் மரியாதை!
இதழ்:1123 வானத்துக்கும் பூமிக்கும் தேவனை நான் அறிவேன்!
யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த அறிவேன் என்ற வார்த்தையின் எபிரேய… Continue reading இதழ்:1123 வானத்துக்கும் பூமிக்கும் தேவனை நான் அறிவேன்!
இதழ்: 1121 எரிகோவில் பூத்த மலர்!
யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா?எனக்கு உண்டு! அமெரிக்காவில் மிகவும் புகழ் வாய்ந்த ஒலி ஒளி நாடகத் தியேட்டரில் (Sight and Sound Theatre) இரண்டு நாடகங்கள் பார்த்தோம்! ஒன்று "முதல் கிறிஸ்துமஸ் " First… Continue reading இதழ்: 1121 எரிகோவில் பூத்த மலர்!
இதழ்:966 நம்மை தமக்கு சொந்தமாக்கிய மாபெரும் அன்பு!
ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவள்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல! அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading இதழ்:966 நம்மை தமக்கு சொந்தமாக்கிய மாபெரும் அன்பு!
இதழ்: 963 ஒளியாய் பிரகாசித்த ஒரு பெண்!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமி தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த… Continue reading இதழ்: 963 ஒளியாய் பிரகாசித்த ஒரு பெண்!
இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில், கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
இதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா?
நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்” ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து… Continue reading இதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா?
இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானைக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே… Continue reading இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
இதழ்: 859 சுற்றிலும் மதில் எழுப்பப்பட்ட ஒரு வாழ்க்கை!
யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர். நாம் ஒருசில மாதங்களுக்கு முன்னால் படித்தவிதமாக மோசே பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானைப் பற்றி பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான் என்று துக்கமுகமாய் வந்தனர். தங்களை வழிநடத்தி வரும் தேவனாகிய… Continue reading இதழ்: 859 சுற்றிலும் மதில் எழுப்பப்பட்ட ஒரு வாழ்க்கை!
