ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு… Continue reading இதழ்:979 நம்பிக்கை, சந்தோஷம், ஆறுதல் தரும் மீட்பர்!
Tag: ரூத்
இதழ்: 978 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளும் தேவன்!
லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின்… Continue reading இதழ்: 978 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளும் தேவன்!
இதழ்: 977 தகுதியற்ற எனக்கு நீர் கொடுத்த தயை என்னும் ஈவு!
ரூத்: 2: 13 ” அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.” இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான்… Continue reading இதழ்: 977 தகுதியற்ற எனக்கு நீர் கொடுத்த தயை என்னும் ஈவு!
இதழ்:976 எதினாலே என் மேல் இத்தனை தயை தேவனே!
ரூத்: 2 : 9 “…உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணிர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.” யோவான்: 4: 13, 14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணிரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”. தண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருபவள் சமாரிய ஸ்திரீ தான் அல்லவா! கர்த்தராகிய… Continue reading இதழ்:976 எதினாலே என் மேல் இத்தனை தயை தேவனே!
இதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்!
ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். கடந்த வருடம் எங்களுக்கு மழைகாலமே இல்லாததுபோல சென்னையில் மழையே இல்லை. குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வறண்ட நேரத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன் எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்சி காணப்பட்டது.… Continue reading இதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்!
இதழ்:974 தருணம் கொடுத்தால் நிச்சயம் உன்னையும் நிரப்புவார்!
ரூத்: 2 : 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ண வேண்டாம். பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து , நன்றியறிதலோடு கொடுப்பது என்று. பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில்… Continue reading இதழ்:974 தருணம் கொடுத்தால் நிச்சயம் உன்னையும் நிரப்புவார்!
இதழ்:973 அறுவடையின் சத்தம் வெகு சீக்கிரம் கேட்கும்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. நாம் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து அவள் விசுவாசத்தை அழித்ததால் அவள் பெத்லெகேமில் அவளை வரவேற்க வந்த உறவினரிடம் தன்னை நகோமி என்று அழைக்காமல் மாரா என்று அழைக்கும்படி கூறினாள் என்று பார்த்தோம். நகோமியின் வாழ்க்கையை நாம் படிக்கும்போது அவளுடைய குடும்பம் கர்த்தருடைய… Continue reading இதழ்:973 அறுவடையின் சத்தம் வெகு சீக்கிரம் கேட்கும்!
இதழ்: 972 தேவனுடைய வார்த்தையால் திருப்தியான உள்ளமே துதியால் நிரம்பும்!!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading இதழ்: 972 தேவனுடைய வார்த்தையால் திருப்தியான உள்ளமே துதியால் நிரம்பும்!!
இதழ்: 971 கசப்பைக் களைந்து என் இருதயத்தை புதுப்பியும்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading இதழ்: 971 கசப்பைக் களைந்து என் இருதயத்தை புதுப்பியும்!
இதழ்: 970 இலையுதிர் காலம் கடந்து போய் உன் வாழ்க்கை மலரும்!
ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான… Continue reading இதழ்: 970 இலையுதிர் காலம் கடந்து போய் உன் வாழ்க்கை மலரும்!
