நியாதிபதிகள் 11:31 “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”. ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்! பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான்… Continue reading இதழ்: 918 வார்த்தைகளின் விளைவு!
Tag: வார்த்தைகள்
இதழ்: 914 கேட்பதில் தீவிரம் ஆனால் பேசுவதில் பொறுமை தேவை!
நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றாக்கூடாது என்றான்.” நாங்கள் அடிக்கடி காரில் நீண்ட பிரயாணம் செய்வதுண்டு! பத்து மணி நேரம் காரில் உட்கார்ந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உடல் புண் மாதிரி வலிக்கும். அப்படி களைத்து வரும்வேளையில் , வீட்டுக்குள் வந்தவுடனே பல பிரச்சனைகள் நம் வருகைக்காக… Continue reading இதழ்: 914 கேட்பதில் தீவிரம் ஆனால் பேசுவதில் பொறுமை தேவை!
இதழ்: 688 ஆசீர்வாதமான வார்த்தைகள்!
2 சாமுவேல் 6:20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது. 2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது. தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து… Continue reading இதழ்: 688 ஆசீர்வாதமான வார்த்தைகள்!
