சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் கடந்த வாரம் மிரியாமைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம்! அவள் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான, தைரியமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். இந்த சம்பவம் நடந்த போது மிரியாமுக்கு ஏழிலிருந்து பத்து வயதுக்குள் இருந்திருக்கும் என்று கருதுகின்றனர்! நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார்… Continue reading இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
Tag: விசுவாசம்
இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘… Continue reading இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
இதழ்:980 நான் தவறவிட்ட புதை பொருட்கள்!
ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல… Continue reading இதழ்:980 நான் தவறவிட்ட புதை பொருட்கள்!
இதழ்:929 இன்று நீ அடையாளத்தை தேடுகிறாயா?
நியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார். ஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்! எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா? எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படியாக கர்த்தரை பரீட்சை பார்த்திருக்கிறோம். இதைப் படிக்கும்போது கர்த்தரை பரீட்சை பார்த்த ஒருவனுடைய கதை மனதில்… Continue reading இதழ்:929 இன்று நீ அடையாளத்தை தேடுகிறாயா?
இதழ்: 858 இரட்சிப்பின் அடையாளமான ஒரு கயிறு!
யோசுவா: 2: 17 ” அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி….” இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் எரிகோவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி யாராவது புதிய மனிதர் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டார்களா என்று விசாரித்தான். உடனடியாக சிந்திக்கும் திறன் கொண்ட ராகாப், அந்த இருவரையும் தன் வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு,… Continue reading இதழ்: 858 இரட்சிப்பின் அடையாளமான ஒரு கயிறு!
இதழ் 852 ஒரு சேதமுமடையாமல் காப்பவர்!
எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே.” என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது வெளியில் எந்த விதமான பழ ரசமும் வாங்கமாட்டேன். வீட்டிலேயே பழங்களை வாங்கி அதை ஜூஸ் போட்டு வைப்பேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பு திராட்சை கிரஷ் பண்ணுவது! கடினமான வேலைதான் ஆனாலும்… Continue reading இதழ் 852 ஒரு சேதமுமடையாமல் காப்பவர்!
இதழ்: 851 சரியான திசையில் திருப்பபட்ட அண்டெனா போன்ற விசுவாசம்!
எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” அந்தக்காலத்தில் டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா (அலைவாங்கி)பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவி என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி மேலே ஏறி அந்த அன்டெனாவை திருப்புவோம், ஒருவர்… Continue reading இதழ்: 851 சரியான திசையில் திருப்பபட்ட அண்டெனா போன்ற விசுவாசம்!
இதழ்: 832 திடமான நம்பிக்கையினால் வரும் விசுவாசம்!
சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ, அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன்… Continue reading இதழ்: 832 திடமான நம்பிக்கையினால் வரும் விசுவாசம்!
இதழ்: 799 பொய்யை நம்பாதிருக்க ஞானம் தாரும்!
சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம். நாம் கடைசியாக ஏதேன் என்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார்.… Continue reading இதழ்: 799 பொய்யை நம்பாதிருக்க ஞானம் தாரும்!
இதழ்: 724 சோதனைகளைக் கடந்த உண்மையான விசுவாசம்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில் உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில்… Continue reading இதழ்: 724 சோதனைகளைக் கடந்த உண்மையான விசுவாசம்!
