1 சாமுவேல் 1: 11 ".... ஒரு பொருத்தனை பண்ணினாள்" பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான் (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு,… Continue reading மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!
Tag: வேதாகமப் பாடம்
மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
1 சாமுவேல்: 1: 11 "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,.." மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே, ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள்… Continue reading மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி… Continue reading மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
மலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்?
1 சாமுவேல் 1: 9 " சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்..." நாம் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம் "என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?" (சங்:42:5) என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா? அன்னாள் பல நாட்கள் வண்டியில் பிரயாணம் பண்ணி கர்த்தருடைய… Continue reading மலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்?
மலர் 7 இதழ்: 564 தவறை ஒப்புக்கொண்டால் அவமானமா?
1 சாமுவேல்: 1:17 "அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்." என்னுடைய 39 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை! இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் அனைவரிடம்… Continue reading மலர் 7 இதழ்: 564 தவறை ஒப்புக்கொண்டால் அவமானமா?
மலர் 7 இதழ்: 563 குற்றம் சாட்டும் விரல்!
1 சாமுவேல் : 1:14 " நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்." நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம். ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில்… Continue reading மலர் 7 இதழ்: 563 குற்றம் சாட்டும் விரல்!
மலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்!
I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஏதோ ஒரு சம்பவத்தில் யாரோ ஒருவர் சண்டையிடும் போது உபயோகப் படுத்தின வார்த்தைகளைப் பற்றி விளக்கிய ஒருவர் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று விளக்கியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகும் என்று நமக்குத் தெரியும். சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப்… Continue reading மலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்!
மலர் 7 இதழ்: 561 கண்ணீரே உணவான வாழ்க்கை!
1 சாமுவேல்: 1: 9,10 "சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் ! நேசித்து மணந்த அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்! பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின்… Continue reading மலர் 7 இதழ்: 561 கண்ணீரே உணவான வாழ்க்கை!
மலர் 7 இதழ்: 560 காயப்படுத்தும் வார்த்தைகள்!
1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இன்று காலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, ஒரு நல்ல குடும்பத்துக்கான அஸ்திபாரம் போட நாம் எவ்வளவு கடினமாக பாடுபட வேண்டியிருந்தது என்று சிந்தித்தேன். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், நம்மிடம் உள்ளதை வைத்து, குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவது நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை! இங்கே அன்னாள், பெனினாள்… Continue reading மலர் 7 இதழ்: 560 காயப்படுத்தும் வார்த்தைகள்!
மலர் 7 இதழ்: 559 கிறிஸ்துவின் அன்பு என்னும் உள்ளாழி!
1 சாமுவேல் 1: 4, 5 " அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்." என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட வண்டி அது. அப்படிப்பட்ட வண்டி கொஞ்ச காலமாக சிறிய பள்ளத்தில் இறங்கினாலும் வேகமாக ஆடுகிறது. என்னவாயிருக்கும்?… Continue reading மலர் 7 இதழ்: 559 கிறிஸ்துவின் அன்பு என்னும் உள்ளாழி!
