யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். இந்த யோசுவாவின் புத்தகத்தில் அடுத்தபடியாக நாம் காலேபுக்கும் அவன் மகள் அக்சாளுக்கும் இடையில் இருந்த ஒரு அருமையான உறவைப் பற்றிப்பார்க்கப்போகிறோம். யோசுவா 14 ம், 15 ம் அதிகாரங்களில், மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுகாரனாய் அனுப்பப்பட்ட காலேபைப் பற்றியும் அவன் குமாரத்தி அக்சாளைப் பற்றியும் படிக்கிறோம். ஆச்சரியப்படும் விதமாக, இதே கதை நியாதிபதிகள்… Continue reading இதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்!
Tag: வேவுகாரர்
இதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி!
எபி:11:31 “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம்என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் உலகத்தை மறுதலித்தல் என்று நேற்று பார்த்தோம். இன்று அவளுடைய விசுவாச வாழ்க்கையின் அஸ்திபாரத்துக்கு நம்பிக்கை என்பது அடுத்த… Continue reading இதழ்: 1128 தேவனுடைய ஆளுகைக்கு முற்றிலும் ஒப்புவி!
இதழ்:1124 இரங்குதல் என்பது இரக்கத்தின் தேவனுக்கு கொடுக்கும் மரியாதை!
யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading இதழ்:1124 இரங்குதல் என்பது இரக்கத்தின் தேவனுக்கு கொடுக்கும் மரியாதை!
இதழ்: 871 கடல் அலைகள் போன்ற அன்பு!
யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு… Continue reading இதழ்: 871 கடல் அலைகள் போன்ற அன்பு!
இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானைக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே… Continue reading இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
இதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே!
யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த… Continue reading இதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே!
