ஆதி: 25: 20 “ மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்”. மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில்,… Continue reading மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?
Month: September 2010
மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!
ஆதி:25:1-2 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்” ஆபிரகாம் தன் முதிர் வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம். ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும். தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத் தேடினான் ஆபிரகாம். தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன்… Continue reading மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!
மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!
ஆதி:24 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில் ஒன்றிணைந்தனர் என்று பார்த்தோம் அல்லவா? இந்த இடத்தில் வேதம் நமக்கு கற்பிக்கிற மகா பெரிய சம்பவம், மணவாளனாகிய கிறிஸ்துவுடன், மணவாட்டியாகிய நாம் ( திருச்சபை) ஒன்றிணைக்கப்படுவது. இந்த திருமண சம்பவத்தை இன்று நாம் படிப்போம். முதலாவது ஆதி: 24:7 ல் , தந்தையாகிய ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு மணவாட்டியை அளிக்க விரும்புகிறதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் பிதாவாகிய தேவன் தன் ஒரே… Continue reading மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!
ஜெபக் கூடாரம்!
வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்! “சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.” ( II நாளாகமம் : 7:1) ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! வாருங்கள் நம் ஜெபக்கூடாரத்துக்குள்! நாம் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம்… Continue reading ஜெபக் கூடாரம்!
மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!
ஆதி: 21: 1 – 7 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குறைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக்… Continue reading மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!
மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
ஆதி: 19: 3 – 38 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம். இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி, இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில்… Continue reading மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
ஆதி: 19: 15 – 29 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின்… Continue reading மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!
ஆதி: 19: 1 - 15 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், என்று நேற்று பார்த்தோம். லோத்துவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது சோதோமைப் பார்த்து ஏங்கியிருப்பார்கள். ஆதி : 13: 12 ல், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் என்று வாசிக்கிறோம். நாம் அடுத்த… Continue reading மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!
மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !
ஆதி: 16 – 33 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ( ஆதி: 19:1). ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார்! என்ன ஆச்சரியம்!… Continue reading மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !
ஜெபக் கூடாரம்!
2000 வருடங்களுக்கு மேலாக நமக்காக எறேடுக்கப்படும் ஜெபம் ! ரோமர் : 8 : 34 “...கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.” நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்! நாம் இன்று, நம்முடைய ஜெபக் கூடாரத்தில் அவருடன் இணைந்து நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்! நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்… Continue reading ஜெபக் கூடாரம்!
