அன்பு சகோதர சகோதரிகளே!
இயேசுவின் இனிய நாமத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் என்ற தியான மலரை எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் பலர் இதைப் படித்து பயனடைந்து வருவதால் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
இதை நான் பெண்களுக்கான தியான மலராக எழுதிய போதிலும் அநேக சகோதர்கள் இதை வாசித்து பயன் பெறுவதாக எனக்கு எழுதினர். அதனால் புதிய ஆண்டு பரிசாக இதை குடும்ப மலராக அளிக்க விரும்புகிறேன். வேதத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தாலும், இது அனைவரும் படித்து பயன் பெறும்படி எழுதப்படும் குடும்ப மலராக புது வருடத்திலிருந்து வெளி வரும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்அனைவரோடும் தங்குவதாக!
தங்கள் அன்பு சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்,
