நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்! அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான். அதற்காக… Continue reading மலர் 2 இதழ் 189 பசுந்தோல் போர்த்திய சிசெரா என்னும் புலி!
Month: April 2012
மலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா?
நியா: 4:19 " அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். இன்றைக்கு மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு… Continue reading மலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா?
மலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு? சிந்தித்து சொல்?
நியா: 4: 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டு போய்; உள்ளே வாரும்: என் ஆண்டவனே,என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; யாகேல் என்னும் பெயருக்கு வரையாடு என்று அர்த்தம் என்று பார்த்தோம். அவள் ஒரு நாடோடிப் பின்னணியில் வளர்ந்திருக்கக் கூடும் என்றும் பார்த்தோம். யாகேல் முரட்டுப் பெண்ணாக வளர்ந்திருக்கலாம் ஆனால் முட்டாள் பெண்ணாக அல்ல! புத்திசாலி என்று எண்ணப்படுகிற எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனையும், பிள்ளைகளையும் கூர்ந்து கவனிப்பாள். கணவனுடைய நட்பும், பிள்ளைகளுடைய… Continue reading மலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு? சிந்தித்து சொல்?
மலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு!
நியா: 4: 18 "யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்...." சென்றவாரம் நான் ஆலயத்துக்கு சென்ற போது அங்கே ஒரு அக்கா என்னிடம் வந்து, உங்கள் மகள் ஷெக்கினா எப்படி இருக்கிறாள்? அவளை நான் குளோரி என்று கூப்பிடுவேன், அவளையும், அவள் பெயரின் அர்த்தத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும்! அந்த பெயருக்கு மனிதருடைய கண்களுக்கு தென்பட்ட தேவனுடைய மகிமை என்று தானே அர்த்தம்? என்று கேட்டார்கள். என் மகள் பிறந்தபோது, அவளை முதன்முறையாக ஷெக்கினா என்று… Continue reading மலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு!
மலர் 2 இதழ் 185 தலைப்பு செய்திகள்! சிசெரா தப்பிவிட்டான்!
நியா: 4: 17 "சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது." வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன! இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், " தலைப்புச் செய்திகள்... சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!"… Continue reading மலர் 2 இதழ் 185 தலைப்பு செய்திகள்! சிசெரா தப்பிவிட்டான்!
மலர் 2 இதழ் 184 சுய பெலன் சிலந்தி நூல் போன்றது!
நியா: 4 : 16 " பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை." நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading மலர் 2 இதழ் 184 சுய பெலன் சிலந்தி நூல் போன்றது!
மலர் 2 இதழ் 183 உன் எதிரிகளைக் கலங்கப் பண்ணுவார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று… Continue reading மலர் 2 இதழ் 183 உன் எதிரிகளைக் கலங்கப் பண்ணுவார்!
மலர் 2 இதழ் 182 வழிகாட்டியின் பின் செல்!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள். இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம். இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும்,… Continue reading மலர் 2 இதழ் 182 வழிகாட்டியின் பின் செல்!
மலர் 2 இதழ் 181 இது உன்னுடைய நாள்!
நியா: 4:14 "அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; " அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள். இதை வாசிக்கும்… Continue reading மலர் 2 இதழ் 181 இது உன்னுடைய நாள்!
