நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்....என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில், கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading மலர் 2 இதழ் 198 துணிகரமாய் செயல்படு – தெபோராளைப் போல!
Month: May 2012
மலர் 2 இதழ் 197 எதை செய்தாலும் மன உறுதியோடு செய் – தெபோராளைப் போல!
நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன் வரை, பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள்… Continue reading மலர் 2 இதழ் 197 எதை செய்தாலும் மன உறுதியோடு செய் – தெபோராளைப் போல!
மலர் 2 இதழ் 196 செய்யும் எதையும் சரிவர செய் – தெபோராளைப்போல!
நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். சில மாதங்களுக்கு முன்னர் என் கணவர் எனக்கு ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வாங்கிக்கொடுத்தார். மேலை நாடுகளில் வாழும் உங்களில் சிலருக்கு இது ஒன்றும் புதிதல்ல! இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று… Continue reading மலர் 2 இதழ் 196 செய்யும் எதையும் சரிவர செய் – தெபோராளைப்போல!
மலர் 2 இதழ் 195 நெருங்கி வா! இரட்டிப்பாய் பெற்றுக்கொள்!
நியா: 5: 31 "அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது." ஆனைமலை என்றழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள வால்பாறை என்ற பட்டணத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. மலையின் மேல் இருக்கும் நாட்களில் , சில்லென்று காற்று அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். அதேவிதமாக ஒருமுறை வெப்பத்தின் கூர்மையை நான் சென்னையில் உணர்ந்தேன். என்னிடம் வேலை… Continue reading மலர் 2 இதழ் 195 நெருங்கி வா! இரட்டிப்பாய் பெற்றுக்கொள்!
A special Mothers Day Message! தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு!
நியா: 5 : 12 " விழி, விழி, தெபோராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; ராஜாவின் மலர்களில் வேதத்தை நாம் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்த பின்னர், இருளில் ஒளி வீசிய அநேக தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனம் என்கிற இருளில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, எகிப்தில் பார்வோன் சுமத்திய சுமையின் கீழ் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி எல்லாமே இருள் மயமானபோது, தேவன் அவர்களுக்காக கிரியை செய்தார். இரண்டு சாதாரண மருத்துவச்சிகளின் மூலமாக… Continue reading A special Mothers Day Message! தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு!
மலர் 2 இதழ் 194 ஏற்றம் பெற ஒரு வழி!
நியா: 5: 1 - 3 "அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்." இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த "தெபோராளின் ஜெபம்" என்றழைக்கப்படும் பகுதியின் மூன்று நாள் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம்… Continue reading மலர் 2 இதழ் 194 ஏற்றம் பெற ஒரு வழி!
மலர் 2 இதழ் 193 ஒருவாரம் பட்டினி! ஒருநாள் சாப்பாடு?
நியா: 4: 24 "இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது." இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது. "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது… Continue reading மலர் 2 இதழ் 193 ஒருவாரம் பட்டினி! ஒருநாள் சாப்பாடு?
மலர் 2 இதழ் 192 அவரால் மட்டுமே கூடும்!
நியா: 4 : 23 "இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்." நாம் நம்முடைய தியானத்தில் தேவனாகிய கர்த்தர், தெபோராள், பாராக், யாகேல் என்ற மூன்று வித்தியாசமான மனிதர்களை, தம்முடைய சித்தத்தை பூமியிலே நிறைவேற்ற உபயோகப்படுத்தினார் என்று பார்த்தோம். ஒரு நிமிடம் கவனியுங்கள்! இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது! கர்த்தருக்கு தெபோராள், பாராக், யாகேல் என்றவர்களின் ஊழியம் தேவைப்பட்டது, அவர்களுடைய வரங்கள் அவர் சேவைக்குத்… Continue reading மலர் 2 இதழ் 192 அவரால் மட்டுமே கூடும்!
மலர் 2 இதழ் 191 நீ தான் வேண்டும்!
நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது. இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக… Continue reading மலர் 2 இதழ் 191 நீ தான் வேண்டும்!
மலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே!
நியா: 4:21 "பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்" ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து… Continue reading மலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே!
