நியாதிபதிகள்: 13:4 "ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு". என்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று குன்றியபோது வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தோம். அவள் வந்து பாத்திரம் விளக்கி சென்றவுடன் அம்மா எடுத்து மறுபடியும் கழுவி வைப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நானும் அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். சிலநேரங்களில்… Continue reading மலர் 3 இதழ் 224 திராட்சைப்பழம் சாப்பிடக்கூடவா தடை???
Month: September 2012
மலர் 3 இதழ் 223 நூலைப்போல சேலை!
நியாதிபதிகள்:13:3,4 "கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்." ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. மனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு… Continue reading மலர் 3 இதழ் 223 நூலைப்போல சேலை!
மலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்!
நியாதிபதிகள்: 13:2,3 "அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்." மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது , தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன். இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிறது என்பதை அறிவேன். வேதாகமத்தின் காலத்தில்… Continue reading மலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்!
சர்வதேச மகளியர் தினம்!
நியாதிபதிகள்: 13:2 "அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்". சில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட்அ வைக்கும். சில பகுதி என்னை அழ வைக்கும். ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன். பெண்ணுரிமைகளைப் பற்றி அதிகமாக நாம் எண்ணும் இந்த தினத்தில் இந்த வேதாகமப் பகுதி… Continue reading சர்வதேச மகளியர் தினம்!
மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி!
நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி!
மலர் 3 இதழ் 219 கீழ்நோக்கிய சரிவு!
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். மூன்று வாரங்களுக்கு முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக… Continue reading மலர் 3 இதழ் 219 கீழ்நோக்கிய சரிவு!
மலர் 3 இதழ் 218 எதை நினைப்பது! எதை மறப்பது!
நியாதிபதிகள்: 11: 39,40 " இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று, நினைப்பதும் , மறப்பதும் , என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால்… Continue reading மலர் 3 இதழ் 218 எதை நினைப்பது! எதை மறப்பது!
