I wish you all a Merry Christmas ! May the Joy of Christmas fill your hearts! Prema Sunder Raj
Month: December 2012
மலர் 3 இதழ் 251 மாற்றம் ஒரு புதிய வாழ்க்கையின் அடையாளம்!
ரூத்: 1 : 6, 7 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். வட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் இருவருமே வேலையை ராஜினாமா… Continue reading மலர் 3 இதழ் 251 மாற்றம் ஒரு புதிய வாழ்க்கையின் அடையாளம்!
மலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு!
ரூத்: 1 : 6 " கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து" நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading மலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு!
மலர் 3 இதழ் 249 கண்ணீரிலே தோன்றும் வானவில்!
ரூத்: 1: 3 - 5 " நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது,… Continue reading மலர் 3 இதழ் 249 கண்ணீரிலே தோன்றும் வானவில்!
மலர் 3 இதழ் 248 பொடிப்பொடியான கனவுகளுக்குப் பின்னால்?
ரூத்: 1 : 3 " நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்." அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது. சில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க… Continue reading மலர் 3 இதழ் 248 பொடிப்பொடியான கனவுகளுக்குப் பின்னால்?
மலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது!
ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாகாணங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை பார்சல் பண்ணுவது, வீடு தேடி அலைவது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் தேடி அலைவது,… Continue reading மலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது!
மலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்!
ரூத்: 1: 1 "நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று ". தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலா? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி?… Continue reading மலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்!
மலர் 3 இதழ் 245 எனக்குப் பிடித்த சாண்ட்விச்!
ரூத்: 1: 1 நியாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்... ஞாயிற்றுக்கிழமை காலைதோறும் நாங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் டோஸ்ட் பண்ணுவது எனக்கு வழக்கம். இப்பொழுதெல்லாம் 7 வகை தானியங்களால் செய்யப்பட்ட பிரட் கிடைக்கிறது. இரண்டு துண்டு பிரட்டுக்கு நடுவே வேர்க்கடலை பட்டரை த்தடவி , வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்து டோஸ்ட் செய்வது மிகவும் ருசியாக இருக்கும்! இது ருசியாக மட்டும் அல்ல, நன்றாக பசியும் தாங்கும் ஏனெனில் இதில் நமக்குத்தேவையான புரதச் சத்து… Continue reading மலர் 3 இதழ் 245 எனக்குப் பிடித்த சாண்ட்விச்!
