2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது. தாவீதின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை. ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று… Continue reading இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???
Month: June 2019
இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!
2 சாமுவேல் 11: 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம். இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை பாருங்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் … Continue reading இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!
இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள். ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அங்கு ஒரு தொட்டியில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து மண் கலரில் விழுந்து கிடக்கும். நான் அந்தப்பூ தான் விழுந்து கிடக்கிறது என்று காலை தூக்கி… Continue reading இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!
இதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்!
சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது... தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு எடுப்பது தவறே இல்லை. பெரிய கூட்டமாய் வந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்த தன்னுடைய சீஷரைப் பார்த்து , தன்னுடன் வந்து சற்று இளைப்பாறும்படி கர்த்தராகிய… Continue reading இதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்!
இதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்!
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது.... பல நேரங்களில் சாலை ஓரங்களில் சோம்பலாய் உட்கார்திருப்பவர்களைப் பார்த்து வேலைவெட்டியில்லாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறார்களே என்று நினைப்பேன். ஆனால் பணக்காரகள் தான் அதிகமாக வேலை வெட்டியில்லாமல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களுக்கு உல்லாசமான ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது. இங்குதான் லோத்தின் குடும்பம் வாழ்ந்த சோதோமும், எருசலேமில் யுத்தத்துக்கு போகாமல் வீட்டில் இருந்த தாவீதின் கதையும் சம்பந்தப்படுகிறது!… Continue reading இதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்!
இதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு?
2 சாமுவேல்:11:1 ....தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். வேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று! சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான். இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த… Continue reading இதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு?
இதழ்; 701 அர்த்தமுள்ள வாழ்க்கை!
2 சாமுவேல் 11: 1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்கு புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். தாவீது தேவனால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டவன்! விசேஷித்த பெலத்தால் எதிரிகளை வென்றான். அதினால் கிடைத்த பொருட்களை விசேஷமான பெருந்தன்மையால் கர்த்தருக்கு அர்ப்பணித்தான் என்று பார்த்தோம். பெலத்தாலும், பெருந்தன்மையாலும் மட்டுமல்ல விசேஷமான நீதியையும் நியாத்தையும் கொண்டு தன் மக்களை அரசாண்டான் என்றும் பார்த்தோம்.… Continue reading இதழ்; 701 அர்த்தமுள்ள வாழ்க்கை!
இதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்!
2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான். நாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும்? நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும், நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்! ஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளது. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை தங்களுடைய வாழ்க்கையில்… Continue reading இதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்!
இதழ்: 699 கொடுப்பதில் பெருந்தன்மை!
2 சாமுவேல் 8: 10 - 12 .... மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டு முட்டுகளைக் கொண்டு வந்தான். அவன் கொண்டு வந்தவைகளைத் தாவீது ராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர் , பெலிஸ்தர்,அமலேக்கியர்,என்னும் சகல்ஜாதியார்களிடத்திலும் ..... சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கூடக் கர்த்தருக்கு பிரதிஷ்டைப்பண்ணினான். நான் இந்த 2 சாமுவேல் 8 போன்ற அதிகாரங்களை என்றுமே கவனம் செலுத்தி படித்ததேயில்லை. ஆனால்… Continue reading இதழ்: 699 கொடுப்பதில் பெருந்தன்மை!
இதழ்: 698 விசேஷித்த பெலன்!
2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து....... அவன் மோவாபியரையும் முறிய அடித்து....... ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா....தாவீது அவனையும் முறிய அடித்து.......தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு.....தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன். இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம்… Continue reading இதழ்: 698 விசேஷித்த பெலன்!
