நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.” நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading இதழ்: 888 ஒரு சிலந்தி நூலைக் கொண்டு கப்பலை திசை திருப்ப முடியுமா?
Month: April 2020
இதழ்: 887 கலங்காதே! கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று… Continue reading இதழ்: 887 கலங்காதே! கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
இதழ்: 886 உனக்கு முன்பாக நான் செல்கிறேன்! பயப்படாதே!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள். இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம். இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும்,… Continue reading இதழ்: 886 உனக்கு முன்பாக நான் செல்கிறேன்! பயப்படாதே!
இதழ்: 885 உங்களுக்கு ஒரு விசேஷமான செய்தி!
நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “ அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள். இதை வாசிக்கும்… Continue reading இதழ்: 885 உங்களுக்கு ஒரு விசேஷமான செய்தி!
இதழ்: 884 அன்பின் குரலால் அழைக்கும் சத்தம்!
நியாதிபதிகள் : 4: 9 “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading இதழ்: 884 அன்பின் குரலால் அழைக்கும் சத்தம்!
HAPPY RESURRECTION DAY!
On this Easter morning as we celebrate the fact that Jesus arose from the dead...breaking forever the chains of death, I want to take you back to the time and place in history when Jesus walked the earth. As He gathered a faithful group of followers to His side, none proved more loyal than His… Continue reading HAPPY RESURRECTION DAY!
இதழ்: 883 தனிமையான விசிலைப்போல் அல்ல! இனிமையான இசைக்குழுவைப் போல!
நியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. என்னுடைய 39 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும், நானும் என் கணவரும் சேர்ந்து, இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட்… Continue reading இதழ்: 883 தனிமையான விசிலைப்போல் அல்ல! இனிமையான இசைக்குழுவைப் போல!
இதழ்: 882 தெபோராளின் 24 X 7 சமுதாயத் தொண்டு!
நியாதிபதிகள்: 4:5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.” இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார். இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று… Continue reading இதழ்: 882 தெபோராளின் 24 X 7 சமுதாயத் தொண்டு!
இதழ்: 881 கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று!
நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்? நாம் தெபோராளைப் பற்றி படிக்குமுன் நியாதிபதிகள் புத்தகத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று பார்த்தோம். சரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே… Continue reading இதழ்: 881 கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று!
இதழ்: 880 அவள் ஒரு பிரகாசிக்கும் தீவட்டி!
நியாதிபதிகள்: 4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.” நாம் இப்பொழுது நியாதிபதிகள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள். தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி… Continue reading இதழ்: 880 அவள் ஒரு பிரகாசிக்கும் தீவட்டி!
