நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக… Continue reading இதழ்:923 நீ எடுக்கும் ஒவ்வொரு தவறான அடியும்!!!!!
Month: June 2020
இதழ் 922 எதை நினைக்க? எதை மறக்க?
நியாதிபதிகள்: 11: 39,40 ” இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று, நினைப்பதும் , மறப்பதும் , என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால்… Continue reading இதழ் 922 எதை நினைக்க? எதை மறக்க?
இதழ்: 921 உன் கண்ணீர் துடைக்கப்படும்!
என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” ( சங்: 56:8) என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்… Continue reading இதழ்: 921 உன் கண்ணீர் துடைக்கப்படும்!
இதழ்: 920 இன்று நம்முடைய கடமை என்ன?
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே… Continue reading இதழ்: 920 இன்று நம்முடைய கடமை என்ன?
இதழ்: 919 பயணத்தை இலகுவாக்கும் நல்ல நட்பு!
நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” இந்தப் புதிய மாதத்தில் தேவனுடைய கிருபை நம்மோடு இருந்து, நம்மை எல்லாத் தீங்குக்கும், நம்மை சுற்றி உலாவும் கொள்ளைநோய்க்கும் விலக்கிக் காக்கும்படி ஜெபிக்கிறேன்! தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையும் மகா இரக்கமும் நம்மோடு இருப்பதாக! நல்ல நண்பர்கள் உங்களுக்கு உண்டா? எப்பொழுதோ ஒருமுறை… Continue reading இதழ்: 919 பயணத்தை இலகுவாக்கும் நல்ல நட்பு!
