தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்!
தானியேல்: 9: 21 – 23 அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்………… ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்…..”
தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் அந்த ஜெபத்துக்கு பதிலை, தம்முடைய சமுகத்தில் நின்று ஊழியம் செய்யும் காபிரியல் என்னும் தூதன் மூலமாய் அனுப்புகிறார். நாம் தேவனுடைய பார்வையில் எவ்வளவு முக்கியமானவர்கள்!
தாமதியாமல் தேவனுடைய சமுகத்துக்குள் வாருங்கள், நம்முடைய தேவைகளை அவரிடம் கூறுவோம்! ஒரு மணி நேரமாவது இன்று தேவனுடைய சமுகத்தில் செலவிடுவோம்.
முக்கியமான ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள். கர்த்தர் இந்த நாளை நமக்கு ஆசீர்வதிப்பாராக!
ராஜாவின் மலர்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்பட்டேன் என்று எனக்கு எழுதும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நாம் இதழ் 1000 த்தைக் கடக்க கர்த்தர் செய்த கிருபைக்காகவும் அவருக்கு ந்ன்றி செலுத்துகிறேன். பல வருடங்களாய் இந்தத் தோட்டத்தில் என்னோடு பயணிக்கும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் நன்றி.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
