ஆதி: 4:18 காயீன் ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான். ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும். அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன் நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது, கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம் ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன்,… Continue reading இதழ்: 990 புவி ஈர்ப்பு சக்தியென்றால் தெரியும்! பாவ ஈர்ப்பு சக்தி தெரியுமா?
Month: September 2020
ஜெபமே ஜெயம்!
வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்! சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று II நாளாகமம் 7:1 ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! சாலொமோன் ஜெபிக்கும் போது ஜனங்கள் எல்லோரும் கூடியிருக்கிறார்கள்! திடீரென்று அக்கினி பலிகளை பட்சிக்கிறது, கர்த்தருடைய மகிமை ஆலயத்தையே நிரப்புகிறது! மகா பெரிய வெளிச்சம்! அங்கிருந்த ஜனங்களைப் பற்றி யோசித்து… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்:989 தேவ பிரசன்னத்தை இழந்த அந்த நாட்கள்!
ஆதி: 5:5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளைப் பார்த்தோம். ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதை அறிந்தோம்! அவர்கள் இருவரும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்! அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட கால வாழ்க்கையில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியாமையால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பார்கள்! ஒரு நிமிட சோதனைக்கு இடம்… Continue reading இதழ்:989 தேவ பிரசன்னத்தை இழந்த அந்த நாட்கள்!
இதழ்:988 ஏதேன் தோட்டத்தில் ஒரு பார்வை!
ஆதி: 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன்நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்.நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். பத்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழில் டைப் பண்ண மிகவும் கஷ்டப்படுவேன். அதனால் நான் எழுதியது கூட சுருக்கமாகவே இருக்கும். அதனால் முதல் வருடம் எழுதிய பாகத்தை… Continue reading இதழ்:988 ஏதேன் தோட்டத்தில் ஒரு பார்வை!
இதழ்: 987 ஆழ்ந்து போகும் வேளை கதறும் நாம் சற்று ஜாக்கிரதையாய் அதைத் தடுக்கலாமே!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாம் ரூத்தின் புத்தகத்தை முடித்து விட்டோம். நாளைக்கு புதிய புத்தகத்தை ஆரம்பிக்குமுன்னர் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள கர்த்தர் என்னை ஏவினார். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த இரவில் உணவு அருந்தி விட்டு… Continue reading இதழ்: 987 ஆழ்ந்து போகும் வேளை கதறும் நாம் சற்று ஜாக்கிரதையாய் அதைத் தடுக்கலாமே!
இதழ்: 986 கணக்கை எண்ண கற்றுக்கொடுக்கிறோம் ஆனால் வாழ்வில் எண்ண வேண்டியவைகளை?
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவருடைய கரம் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துமாறு ஜெபிப்போம்! வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை… Continue reading இதழ்: 986 கணக்கை எண்ண கற்றுக்கொடுக்கிறோம் ஆனால் வாழ்வில் எண்ண வேண்டியவைகளை?
