எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்! இந்த வருடத்தின் கடைசி நாள் இன்று! இந்த வருடம் நம் எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதுதானே உண்மை! நாம் என்றுமே கனவில் காணாத சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக உருவெடுத்தன! எத்தனை குடும்பங்களில் இழப்பு! சாதாரணமாக வாழ முடியாத சூழல்! வருமானமின்றி தவித்த நாட்கள்! நம்முடைய ஆலயங்களின் கதவுகள் பூட்டப்பட்ட நாட்கள்! அப்பப்பா! எவ்வளவு கொடுமையான காலகட்டம் இது என்று எண்ணத் தோன்றுதல்லவா? கொரோனாவின் இரண்டாவது… Continue reading இதழ்:1334 கடந்து போன இந்த வருடம் திரும்பி வருமா?
Month: December 2021
இதழ்:1333 மீகாள் தைரியமாய் முடிவெடுத்த ஒரு ராத்திரி!
1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான். சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று.… Continue reading இதழ்:1333 மீகாள் தைரியமாய் முடிவெடுத்த ஒரு ராத்திரி!
இதழ்:1332 ஆத்திரப்படுவதால் எதை அடைய முடியும்?
1 சாமுவேல் 19: 1-6 தாவீதைக் கொன்றுப்போடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். சவுலின் குமாரனாகிய யோனத்தானோ தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்..... யோனதான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி ... தாவீதைக் கொல்லுகிறதினால் குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ் செய்வானேன் என்றான். சவுல் யோனத்தனுடைய சொல்லைக்கேட்டு அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டான். இன்னும் தாவீதைக் கொல்லும் வெறி சவுலுக்கு அடங்கவில்லை. முதலில்… Continue reading இதழ்:1332 ஆத்திரப்படுவதால் எதை அடைய முடியும்?
இதழ்:1331 கர்த்தரே உனக்கு சுகமளிக்கும் தைலமாவார்!
1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி... மீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது. மீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது… Continue reading இதழ்:1331 கர்த்தரே உனக்கு சுகமளிக்கும் தைலமாவார்!
இதழ்:1330 கர்த்தரே உன் அடைக்கலமும் ,கோட்டையுமாயிருப்பார்!
1 சாமுவேல் 18:17 சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலால் தாவீதைக் கொல்லமுடியவில்லை. அவனிடம் கர்த்தரின் ஞானம் இருந்ததால் சவுல் அவனைக்கண்டு பயந்தான் என்று படித்தோம் அல்லவா? இப்பொழுது சவுல் ஒரு தந்திரமான திட்டம் தீட்டுவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். என்னத் திட்டம் அது? என் குமாரத்தியை உனக்கு கல்யாணம்… Continue reading இதழ்:1330 கர்த்தரே உன் அடைக்கலமும் ,கோட்டையுமாயிருப்பார்!
இதழ்:1329 கிறிஸ்மஸ் என்பதின் ஒரே அர்த்தம்!
1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை… Continue reading இதழ்:1329 கிறிஸ்மஸ் என்பதின் ஒரே அர்த்தம்!
இதழ்:1328 நாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் நோக்கம்!
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துமஸ் வாரம் இது! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது இவை எல்லாவற்றையுமே நாம் இந்த மாதம்… Continue reading இதழ்:1328 நாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் நோக்கம்!
இதழ்:1327 தேடினால் நிச்சயமாக கண்டடைவோம்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.... இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை மத்தேயு சுவிசேஷத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! இன்றுஇரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பற்றிப் படிக்கலாம்! இயேசு கிறிஸ்துவானவர் பெத்லேகேமில் பிறந்த பின்னர், இந்த சாஸ்திரிகள் ஒரு ராஜாவைத் தேடி யூதேயாவுக்கு வந்து ஏரோது ராஜாவிடம் செல்கின்றனர். யார் இந்த சாஸ்திரிகள்? இவர்கள் வான… Continue reading இதழ்:1327 தேடினால் நிச்சயமாக கண்டடைவோம்!
இதழ்:1326 தேவாதி தேவன் மானிடனான அதிசயம்!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ்:1326 தேவாதி தேவன் மானிடனான அதிசயம்!
இதழ்:1325 இயேசுவின் பிறப்பு வெளிப்படுத்திய மாதயவு!
ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:1325 இயேசுவின் பிறப்பு வெளிப்படுத்திய மாதயவு!