எரேமியா: 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்! ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா? என்னுடைய… Continue reading இதழ்:1389 நம்பும்போதுதான் அவரது நம்பகத்தன்மை தெரியும்!!
Month: March 2022
இதழ்: 1388 தேவனின் உண்மையை ருசித்துப் பார்!
சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. நாம் ஒரு நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன். உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.… Continue reading இதழ்: 1388 தேவனின் உண்மையை ருசித்துப் பார்!
இதழ்:1387 ஆத்துமமே கர்த்தரையே நோக்கி காத்திரு!
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். 2 சாமுவேலை படித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு சின்ன இடைவெளியில் என் உள்ளத்தை தொட்ட இன்னொரு தலைப்பைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததை காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை… Continue reading இதழ்:1387 ஆத்துமமே கர்த்தரையே நோக்கி காத்திரு!
இதழ்:1386 நீ அல்ல! நானே இதற்கு பதிற்செய்வேன்!
2 சாமுவேல் 3: 26,27 யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான். இன்றைய வேதாகமப்பகுதியை எப்படிப்பட்ட வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை.ஒரு கொடூர பழிவாங்குதலை இங்கு பார்க்கிறோம். முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன்.… Continue reading இதழ்:1386 நீ அல்ல! நானே இதற்கு பதிற்செய்வேன்!
இதழ்:1385 மீடியா மூலம் பார்க்கும் வாழ்க்கை!
2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய வாலிப வயதில் நான் விரும்பினவை எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை. சில நேரங்களில் நான் எதிர்பார்க்காமல் வந்த சில சிறிய… Continue reading இதழ்:1385 மீடியா மூலம் பார்க்கும் வாழ்க்கை!
இதழ்:1384 உன் ஆணவத்தால் நிம்மதியை இழந்து விடாதே!
2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான். தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது சவுல் ராஜாவின் மகள் என்பதற்காக… Continue reading இதழ்:1384 உன் ஆணவத்தால் நிம்மதியை இழந்து விடாதே!
இதழ்:1383 எப்படியாவது அடைந்தே தீருவேன்!
2 சாமுவேல் 3:14 .... நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு… Continue reading இதழ்:1383 எப்படியாவது அடைந்தே தீருவேன்!
இதழ்:1382 இங்கு விதைத்தது அங்கு கனி கொடுத்தது!
2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும். நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு… Continue reading இதழ்:1382 இங்கு விதைத்தது அங்கு கனி கொடுத்தது!
இதழ்:1381 கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறார்! பின்னர் ஏன் இந்த பதவி வெறி?
2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்..... அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது. ஏழறை வருடங்கள் சவுலின் குடும்பம்… Continue reading இதழ்:1381 கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறார்! பின்னர் ஏன் இந்த பதவி வெறி?
இதழ்:1380 நண்பர்களைப் பற்றி நாம் பேசும் அவதூறு!
2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? கடந்த மாதம் தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். உண்மைக்கு… Continue reading இதழ்:1380 நண்பர்களைப் பற்றி நாம் பேசும் அவதூறு!
