2 சாமுவேல்:11:1 ....தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். வேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று. சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான். இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த… Continue reading இதழ்:1416 எருசலேமிலே தங்கியது தவறா?
Month: April 2022
இதழ்: 1415 தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தால் வரும் நன்மை!
2 சாமுவேல் 11: 1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்கு புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். தாவீது தேவனால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டவன்! விசேஷித்த பெலத்தால் எதிரிகளை வென்றான். அதினால் கிடைத்த பொருட்களை விசேஷமான பெருந்தன்மையாக கர்த்தருக்கு அர்ப்பணித்தான் என்று பார்த்தோம். பெலத்தாலும், பெருந்தன்மையாலும் மட்டுமல்ல விசேஷமான நீதியையும் நியாத்தையும் கொண்டு தன் மக்களை அரசாண்டான் என்றும் பார்த்தோம்.… Continue reading இதழ்: 1415 தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தால் வரும் நன்மை!
இதழ்:1414 நம் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டுபவை??
2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான். நாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும்? எனக்கு ஞாபகத்தில் வருவதெல்லாம் நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும், நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்! ஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளன. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை… Continue reading இதழ்:1414 நம் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டுபவை??
இதழ்: 1413 நீ கொடுப்பதின் மூலம் மகிமைப்படும் தேவன்!
2 சாமுவேல் 8: 10 - 12 .... மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டு முட்டுகளைக் கொண்டு வந்தான். அவன் கொண்டு வந்தவைகளைத் தாவீது ராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர் , பெலிஸ்தர்,அமலேக்கியர்,என்னும் சகல்ஜாதியார்களிடத்திலும் ..... சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கூடக் கர்த்தருக்கு பிரதிஷ்டைப்பண்ணினான். இன்று காலையில் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் இந்த 2 சாமுவேல் 8 போன்ற… Continue reading இதழ்: 1413 நீ கொடுப்பதின் மூலம் மகிமைப்படும் தேவன்!
இதழ்:1412 பெலத்தை மிஞ்சிய போராட்டத்தில்…..
2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து....... அவன் மோவாபியரையும் முறிய அடித்து....... ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா....தாவீது அவனையும் முறிய அடித்து.......தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு.....தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி அதிகமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்னதான்… Continue reading இதழ்:1412 பெலத்தை மிஞ்சிய போராட்டத்தில்…..
இதழ்: 1411 உம் கண்கள் என்னைக் கண்டதாலே!!!!
2 சாமுவேல்: 7: 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன். பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தாவீதிடம் கர்த்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கர்த்தருக்கு உன்னிடமும் பெரிய எதிர்பார்ப்பு உண்டு! சங்கீதம் 139:16 ல் என் கருவை உம் கண்கள் கண்டது. என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்.... உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்ற தாவீதின் வார்த்தைகள் எனக்கு பயத்தைக் கொடுக்கும்… Continue reading இதழ்: 1411 உம் கண்கள் என்னைக் கண்டதாலே!!!!
இதழ்: 1410 உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்?
2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்ப பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும்… Continue reading இதழ்: 1410 உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்?
இதழ்: 1409 நீ அல்ல! அவரே உன்னை தெரிந்து கொண்டார்!
2 சாமுவேல்: 7: 8,9 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது… Continue reading இதழ்: 1409 நீ அல்ல! அவரே உன்னை தெரிந்து கொண்டார்!
இதழ்:1408 தாவீதின் மனதை அழுத்திய பாரம்!
2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற… Continue reading இதழ்:1408 தாவீதின் மனதை அழுத்திய பாரம்!
இதழ்: 1407 உன் பாதையில் வெளிச்சம் வேண்டுமா? இளைப்பாறு!
2 சாமுவேல் 7:1 கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது… சில தினங்கள் என்னால் எழுத முடியாமல் தடைபட்டு போனதற்கு வருந்துகிறேன். இன்று மீண்டும் தொடருவோம்! நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை… Continue reading இதழ்: 1407 உன் பாதையில் வெளிச்சம் வேண்டுமா? இளைப்பாறு!