Tamil Bible study

இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!

யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம்… Continue reading இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!

Tamil Bible study

இதழ்:2447 தேவனுடைய வார்த்தைகளின் மேல் அசராத நம்பிக்கை வை!

யோசுவா: 1: 9  நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..” மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம். நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தைத் தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை… Continue reading இதழ்:2447 தேவனுடைய வார்த்தைகளின் மேல் அசராத நம்பிக்கை வை!

Tamil Bible study

இதழ்:2446 நீரே என் அடைக்கலம்! நீரே என் ஆதாரம்!

உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! கிறிஸ்துமஸ் வாரத்துக்கு முன்பு இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர்… Continue reading இதழ்:2446 நீரே என் அடைக்கலம்! நீரே என் ஆதாரம்!

Tamil Bible study

இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!

யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்றை இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன்! என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன் இலைகள்… Continue reading இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!

Tamil Bible study

இதழ்:2444 wishing all my readers a very Blessed Christmas!

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.-2 கொரி 9 : 15 தேவனுடைய பிறப்பைப்பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாத அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்! இயேசு என்ற ஈவை நமக்குத் தந்தருளிய தேவனாகியக் கர்த்தருக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்கள்! நமக்காய் இந்த பூவில் வந்துதித்த தேவ குமாரனின் பிரசன்னம் உங்கள் ஒவ்வொருவரையும் பரிபூரணமாய் வந்தடையட்டும்! WISHING YOU ALL A HAPPY AND BLESSED CHRISTMAS! Dr Prema Sunder Raj and Family

Tamil Bible study

இதழ்:2443 இறைவன் ஒளியாய் இருளில் வந்த அதிசயம்!

லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துமஸ் வாரம் இது!  உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது இவை எல்லாவற்றையுமே நாம் இந்த மாதம்… Continue reading இதழ்:2443 இறைவன் ஒளியாய் இருளில் வந்த அதிசயம்!

Tamil Bible study

இதழ்:2442 எனக்காக பூவில் வந்த பாலன் அவர்!

ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம்! நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும், யோவான் அவரை தேவனுடைய குமாரனாகவும், மத்தேயு அவரை மேசியாவாகவும், இராஜாவாகவும் சித்தரிக்கின்றன!… Continue reading இதழ்:2442 எனக்காக பூவில் வந்த பாலன் அவர்!

Tamil Bible study

இதழ்:2441 மாசில்லாத தேவ புத்திரன் மானிடரானே!

மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றி சிந்திக்கலாம்! ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு ஒரு… Continue reading இதழ்:2441 மாசில்லாத தேவ புத்திரன் மானிடரானே!

Tamil Bible study

இதழ்:2440 நீ இடறினாலும் ஆழ்ந்து போக மாட்டாய்!

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்:2440 நீ இடறினாலும் ஆழ்ந்து போக மாட்டாய்!