உபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” சென்ற வாரம் நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4:20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின்… Continue reading இதழ்:2431 ஏன் ஐயா இந்த வேதனைகள்?
Month: December 2025
இதழ்:2430 என் நேசரின் வழி மாறாக இருந்தாலும் அது நன்மைக்கானதே!
உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை நான் லக்னோவில் வாழ்ந்த பொழுது, எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிடுவது உண்டு! சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும்! அங்கு இரவு வரை சூரியனும் இருக்கும், அனல் காற்றும் இருக்கும். சென்னையிலும் வெயில் காலம் கொடுமையாகவே இருக்கும். அந்தக் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்!… Continue reading இதழ்:2430 என் நேசரின் வழி மாறாக இருந்தாலும் அது நன்மைக்கானதே!
இதழ் 2429 அவர் நாமம் நமக்கு பலத்த துருகம்!
உபாகமம்: 4: 41, 43 ”முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய் பிழைத்திருக்கும்படியாக,.. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் ஏற்படுத்தினான். நான் அதிகமாக சரித்திர புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். சரித்திரப்பூர்வமான இடங்களைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூட நாட்களில் போன உல்லாசப்பயணங்களில், ராஜாக்கள் நம்முடைய நாட்டைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைகள் தான் எப்பொழுதும் என் மனதில் நிற்கும். அந்தக் கோட்டைகளைப் பார்க்கும்போது அந்த நாட்டின் ஜனங்கள் எப்படியாக… Continue reading இதழ் 2429 அவர் நாமம் நமக்கு பலத்த துருகம்!
இதழ்:2428 உனக்கு தேவன் இதை எனக்குச் செய்யவில்லையே என்ற ஆதங்கம் உண்டா?
உபாகமம்: 3: 23 -27 ”அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி; கர்த்தராகிய ஆண்டவரே நீர் உமது அடியானுக்கு உமது மகத்துவத்தையும், உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும், உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாக செய்யத்தக்கவன் யார்? நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிகொண்டேன். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு எனக்கு செவிகொடாமல் என்னை நோக்கி; போதும்… Continue reading இதழ்:2428 உனக்கு தேவன் இதை எனக்குச் செய்யவில்லையே என்ற ஆதங்கம் உண்டா?
இதழ்:2427 இந்த தேவனே என் தேவன்!
உபாகமம்:2:7 ”உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார். இந்த பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்து வருவதை அறிவார். இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..” நேற்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பித்தோம். இந்த புத்தகம் இஸ்ரவேல் மக்களின் பிரயாணத்தை சரித்திரபூர்வமாக விளக்கும் புத்தகம் மாத்திரம் அல்ல, வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய மோசேயின் ஆவிக்குரிய பிரயாணத்தின் நாட்குறிப்பும்கூட என்று பார்த்தோம். அன்றன்று கர்த்தர் கொடுக்கும் செய்தியை தியானமாக… Continue reading இதழ்:2427 இந்த தேவனே என் தேவன்!
இதழ்:2426 உன் நீண்ட பிரயாணத்தில் நீ எங்கேயிருக்கிறாய்?
உபாகமம்: 1:4 ”நாற்பதாம் வருஷம், பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்கு கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்…” இன்று நாம் இந்த வருடத்தின் கடைசி மாதத்திற்கு வந்துள்ளோம். உலகம் முழுவதும் கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் மாதம் இது. இந்த மாதம், இம்மானுவேலனாய் அவதரித்த இயேசுவானவர் நம்மோடிருந்து, நம்மைக் கரம் பிடித்து நடத்துமாறு ஒருநிமிடம் நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்! எண்ணாகமத்தைத் தொடர்ந்து சில நாட்கள் உபாகமத்தில் சஞ்சரிக்கலாம்! சித்திரமும் கைப்பழக்கம்… Continue reading இதழ்:2426 உன் நீண்ட பிரயாணத்தில் நீ எங்கேயிருக்கிறாய்?
