I சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 38 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து பயனடைகின்றனர். உங்கள் அனைவருக்கும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி… Continue reading மலர் 7 இதழ்: 575 கர்த்தருடைய வல்லமை என்ன மாஜிக்கா?
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 574 விதைக்கும் விதை வீணாகாது!
1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான். 1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு… Continue reading மலர் 7 இதழ்: 574 விதைக்கும் விதை வீணாகாது!
மலர் 7 இதழ்: 573 அஸ்திபாரத்தை உறுதியாய் போடு!
1 சாமுவேல்: 2: 11, 12 " பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை." நாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை! இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான்! நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன! சில பாடங்களை நாம்… Continue reading மலர் 7 இதழ்: 573 அஸ்திபாரத்தை உறுதியாய் போடு!
மலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்!
1 சாமுவேல் 2: 19 "அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்". ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த பொம்மையை செய்த சில வருடங்களில் அவர்கள் மரித்துப் போனாலும் அது எனக்கு ஒரு அன்பின் அடையாள சின்னமாக இருக்கிறது. நிச்சயமாக நம்… Continue reading மலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்!
மலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்!
1 சாமுவேல்: 2: 1 "அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி" அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு… Continue reading மலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்!
மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி!
1 சாமுவேல் 1:18 " அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று! மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை! அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில… Continue reading மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி!
மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்!
1 சாமுவேல்: 1: 13 " அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;" அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் 'இருதயத்திலே பேசினாள் ' என்று பார்க்கிறோம். அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம்… Continue reading மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்!
மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!
1 சாமுவேல் 1: 11 ".... ஒரு பொருத்தனை பண்ணினாள்" பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான் (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு,… Continue reading மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!
மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
1 சாமுவேல்: 1: 11 "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,.." மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே, ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள்… Continue reading மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி… Continue reading மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
