ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:1577 எத்தனை மா தயவு! எத்தனை ஆச்சரியம்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1576 எண்ணிப்பார் நீ பெற்ற நன்மைகளை! மறந்து போகாதே!
எண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி; நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்; நீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.” நானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர்… Continue reading இதழ்:1576 எண்ணிப்பார் நீ பெற்ற நன்மைகளை! மறந்து போகாதே!
இதழ்:1575 உனக்காகத் தம் குமாரனையே தந்தருளினார்!
நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”. இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது. நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை… Continue reading இதழ்:1575 உனக்காகத் தம் குமாரனையே தந்தருளினார்!
இதழ்:1574 கோபுரமோ குப்பைகுழியோ உண்மை மட்டுமே வேண்டும்!
ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.… Continue reading இதழ்:1574 கோபுரமோ குப்பைகுழியோ உண்மை மட்டுமே வேண்டும்!
இதழ்:1573 சிறு உபகாரங்களுக்கும் பலன் உண்டு!
யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் இன்று, தேவனாகியக் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த ஒரு கட்டளையைப் பற்றி சிந்திக்கலாம். என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன் இலைகள்… Continue reading இதழ்:1573 சிறு உபகாரங்களுக்கும் பலன் உண்டு!
இதழ்:1572 ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம்!
யாத்தி: 14: 13 “…… நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்……” நாங்கள் கிராமங்களில் உள்ள சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள். நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட… Continue reading இதழ்:1572 ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம்!
இதழ்: 1571 மலரைக் கண்டு துதிக்கும் நீ முள்ளைக் கண்டு சபிக்கலாமா?
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போது ‘என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுவேன்! நல்லவர்களின்… Continue reading இதழ்: 1571 மலரைக் கண்டு துதிக்கும் நீ முள்ளைக் கண்டு சபிக்கலாமா?
இதழ்:1570 ஒப்புக்கொடுத்துப் பார்! அற்புதம் வெளிப்படும்!
நியா: 5: 1 – 3 “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் தியானத்தைப் பார்க்க போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளான இஸ்ரவேல்… Continue reading இதழ்:1570 ஒப்புக்கொடுத்துப் பார்! அற்புதம் வெளிப்படும்!
இதழ்: 1569 உங்கள் வெற்றிக்குப் பின்னணி உங்கள் குடும்பம்தானே!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றிப் படிப்போமானால் அவனுடைய வாழ்வில் பெண்கள் எவ்வளவு முக்கியமாக இருந்தனர் என்று நமக்குத் தெரியும். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம். மோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு… Continue reading இதழ்: 1569 உங்கள் வெற்றிக்குப் பின்னணி உங்கள் குடும்பம்தானே!
இதழ்: 1568 நம் வாழ்வில் தற்செயலாய் ஏதாவது நடக்குமா?
ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது..” வேதத்தில் நாம் ரெபெக்காள் தண்ணீர்… Continue reading இதழ்: 1568 நம் வாழ்வில் தற்செயலாய் ஏதாவது நடக்குமா?
