1 இராஜாக்கள் 10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் கேள்விகணைகளைத் தொகுத்து அதற்கு விடைகளையும் அறிந்தபின்னர், இஸ்ரவேல் முழுவதும் சுற்றிப்பார்க்கிறாள். சாலொமோன் கட்டின தேவாலயத்தின் பிரம்மாண்டத்தையும், தாவீதின் நகரத்தையும் சுற்றிப் பார்த்தபின்னர் அவள் முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய அறிவின் கூர்மையைக் காண்பிக்கின்றன!… Continue reading இதழ்:1546 நியாயமும் நீதியும் தேவனாகிய கர்த்தருடைய நற்குணம்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1545 ஆச்சரியமும் பிரம்மிப்பும் வெளிப்படும் நேரம்!
1 இராஜாக்கள் 10:8-9 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் , எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய அழகிய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வருகிறாள். அவளுடைய கடினமான விடுகதைகளால் சாலொமோனை சோதித்த பின்னர், தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அளித்திருந்த ஞானத்தையும், அவனுடைய ராஜ்யத்தின் செழிப்பையும், அங்கு காணப்பட்ட ஒழுங்கு முறைகளையும் தன்னுடைய கண்ணாரக்… Continue reading இதழ்:1545 ஆச்சரியமும் பிரம்மிப்பும் வெளிப்படும் நேரம்!
இதழ்:1544 நீ செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் மகத்துவத்தை காண்பிக்கும்!
1 இராஜாக்கள் 10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்.... இன்றைய வேதாகமப் பகுதி எனக்கு ரோமர் 14:5 ல் , ..அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு கூறியது நினைவுக்கு வந்தது. இதை என்னிடம் பிரித்து எழுதும்படி சொன்னால் இப்படித்தான் எழுதுவேன், வேதாகமத்தை வாசி, ஆழமாக படி, அதைக் கற்றுக்கொள்,உன் உள் மனதில் நிச்சயமாய் விசுவாசி! ஆனால்… Continue reading இதழ்:1544 நீ செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் மகத்துவத்தை காண்பிக்கும்!
இதழ்:1543 விசுவாசத்தில் நாணலைப்போல ஒழுங்கற்று இருப்போர்!
1 இராஜாக்கள்10: 4-5 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையயும், அவன் பந்தியின் போஜன பதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும்,அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம்பிடித்து நடத்துமாறு தலைகவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம். ஒரு நிமிடம் நம்மை… Continue reading இதழ்:1543 விசுவாசத்தில் நாணலைப்போல ஒழுங்கற்று இருப்போர்!
இதழ்:1542 நல்ல பங்கைத் தெரிந்துகொள்ளத் தவறாதே!
1 இராஜாக்கள் 10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராஜஸ்திரீயைப்பற்றி சில நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஒரு அராபிய நாட்டை சேர்ந்தவள். சாலொமோனையும் அவனோடு இணைந்திருந்த தேவனுடைய நாமத்தையும் அறிய வேண்டி எருசலேமுக்கு வந்தவள். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, அவள் சாலொமோனிடம் அநேக காரியங்களை கேட்டறிந்தாள் என்று பார்க்கிறோம். படிப்பும், ஞானமும் ஆண்களுக்கே உரித்தான அந்த காலகட்டத்தில், இந்தப் பெண் அநேக ஆழமான கேள்விகளோடு… Continue reading இதழ்:1542 நல்ல பங்கைத் தெரிந்துகொள்ளத் தவறாதே!
இதழ்:1541 நீ கொடுப்பதால் ஒருபோதும் இழந்து போக மாட்டாய்!
1 இராஜாக்கள் 10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள் சாலோமோனின் ஞானத்தையும், அதன் மூலம் மகிமைப்படும் கர்த்தருடைய நாமத்தையும் பற்றி நேரில் கண்டு அறிந்துகொள்ளவே சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய பரிவாரத்தோடு புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி அவள் வெறுங்கையோடு வரவில்லை , விலையேறப்பெற்ற பரிசுகளோடு வந்தாள் என்று கூறுகிறது. அநேகர் அவளுடைய வருகையின் நோக்கம் ஒரு அரசியல் காரணம்தான் என்று கூறினாலும், நாம் வேதத்தின்… Continue reading இதழ்:1541 நீ கொடுப்பதால் ஒருபோதும் இழந்து போக மாட்டாய்!
இதழ்:1540 அந்நியரை நியாயம் தீர்க்க வேண்டாம்!
1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, இன்றிலிருந்து ஒரு பத்து நாட்கள் நாம், மிகவும் பிரசித்தமான இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனை நேரில் பார்க்க புறப்பட்டு வந்த வெளிநாட்டு ராணியைப் பற்றி படிக்கப் போகிறோம். இந்த ராணியின் வாழ்க்கை மூலமாக தேவன் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் என்று பார்க்கும் முன்னர் நான் படித்த, அறிந்து கொண்ட சிலவற்றை உங்கள் முன்… Continue reading இதழ்:1540 அந்நியரை நியாயம் தீர்க்க வேண்டாம்!
இதழ்:1539 கடினமானதைப் புரிந்து கொள்ளும் மனம்!
1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, சேபாவின் ராஜஸ்திரீ என்ற பட்டப்பெயர் கொண்ட பெண் அவள். வேதாகம வல்லுநர்கள் அவளை தெற்கத்திய ராஜஸ்திரீ என்றும் கூறுகிறார்கள் ஏனெனில் சேபா ஒரு தெற்கத்திய நாடு. அவள் எங்கிருந்து வந்தாள் என்பது முக்கியம் அல்ல, அவள் எதற்காக வந்தாள் என்று பார்ப்போம். சேபாவின் ராஜஸ்திரீ , கர்த்தருடைய நாமத்தைக் குறித்து சாலொமோனுக்கு உண்டான கீர்த்தியைப்… Continue reading இதழ்:1539 கடினமானதைப் புரிந்து கொள்ளும் மனம்!
இதழ்:1538 என்னுடைய சம்பாத்தியம் என் சாமர்த்தியம் அல்லவா?
2 நாளாகமம் 1:15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான். கடந்த நாட்களில் இராஜாக்களின் புத்தகத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள நாளாகமத்தையும் வாசித்தேன்.வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது தேவனுடைய கிரியைகளின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது, சாலொமோன் இஸ்ரவேலை ஆண்ட நாற்பது வருடங்களில், இஸ்ரவேல் சமாதானத்தோடு இருந்தது மட்டுமல்லாமல் இஸ்ரவேல் மிகவும் செழித்தும் இருந்தது. நம்முடைய இன்றைய வேதாகமப்பகுதி இஸ்ரவேலின் செழிப்பைக் காட்டுகிறது. பொன்னும் வெள்ளியும்… Continue reading இதழ்:1538 என்னுடைய சம்பாத்தியம் என் சாமர்த்தியம் அல்லவா?
இதழ்:1537 உள்ளம் மகிழும்போது உம்மை எப்படி மறப்பேன் ஐயா!
1 இராஜாக்கள் 8:52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக..... 8:66 எட்டாம் நாளில் ஜனங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்கு போய்விட்டார்கள். சாலொமோன் வாக்குத்தத்தின் பிள்ளை. தன்னுடைய வயதுக்கு மீறிய ஞானத்தை கர்த்தரின் அருளால் பெற்றவன்.… Continue reading இதழ்:1537 உள்ளம் மகிழும்போது உம்மை எப்படி மறப்பேன் ஐயா!
