1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை… Continue reading 1069 தேவனுடைய விலையேறப்பெற்ற அன்பு!
Category: Family Devotion
இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
லூக்கா 2: 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்மஸ் ஈவ் என்று சொல்லப்படுகிற கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம்! உண்மையில் நாம் ஒவ்வொருவரும் இந்த நன்னாளை இந்த மாதம் முழுவதுமே நினைவு கூறுகிறோம் அல்லவா? மரியாளிடம் தேவ தூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறியது, மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லெகேம் சென்றது, தேவசேனை மேய்ப்பர்களிடம் இயேசுவின் பிறப்பின் அடையாளத்தைக் கூறியது, வான சாஸ்திரிகள் மேசியாவைத் தேடி வந்தது… Continue reading இதழ்:1068 கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?
இதழ்:1067 வானத்தில் ஓர் நட்சத்திரம்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.... இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை மத்தேயு சுவிசேஷத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! இன்றுஇரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பற்றிப் படிக்கலாம்! அதற்கு முன்பதாக ஒரு கேள்வி! நேற்றைய முன் தினம் இரவு கிறிஸ்மஸ் நட்சத்திரத்தை வானில் பார்த்தீர்களா? பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! சென்னையில் மேகமூட்டம் இருந்தாலும் அது ஓரளவுக்கு… Continue reading இதழ்:1067 வானத்தில் ஓர் நட்சத்திரம்!
இதழ் 1066 பிறந்தார்…. மானிடனாய் பிறந்தார்!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ் 1066 பிறந்தார்…. மானிடனாய் பிறந்தார்!
இதழ்: 1065 பிறந்தார் …. பிறந்தார்!
ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நாம் ஆரம்பிக்கும் முன்பதாக 800 வருடங்களுக்கு பின்னால் இன்று வானில் வலம் வரும் கிறிஸ்மஸ் நட்சத்திரத்தைக் காணத் தவறாதீர்கள்! இதைப்பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்! இரண்டு மகா பெரிய… Continue reading இதழ்: 1065 பிறந்தார் …. பிறந்தார்!
இதழ்: 1064 பெருங்காற்றின் மத்தியில் வந்த தென்றல் போன்ற செய்தி!
யாத்தி: 14: 21, 22 மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இரா முழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும், அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. பார்வோனின் இரதங்களின் சத்தம் இஸ்ரவேல் மக்களை வந்தடைந்தபோது அவர்கள் எங்கேயுமே ஓட முடியாமல் பறவை ஒன்று வேடனின் கண்ணியில் மாட்டியது போலத்… Continue reading இதழ்: 1064 பெருங்காற்றின் மத்தியில் வந்த தென்றல் போன்ற செய்தி!
இதழ் 1063 நீ அமைதியாயிருந்து என் கிரியையைப் பார்!
யாத்தி: 14: 13 “…… நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்……” நாம் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு நம்முடைய பிரயாணத்தைத் தொடருகிறோம்! நாங்கள் கிராமங்களில் சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள். நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன்.… Continue reading இதழ் 1063 நீ அமைதியாயிருந்து என் கிரியையைப் பார்!
இதழ்: 1062 திக் திக்கென்ற பயம்!
யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்…” யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் பகலிலே மேக ஸ்தம்பமாகவும் , இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். அன்று இஸ்ரவேல் மக்கள் கண்ட அற்புதங்களைப் போல நம்மில் யாராவது கண்டதுண்டா? எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள்… Continue reading இதழ்: 1062 திக் திக்கென்ற பயம்!
இதழ்: 1061 திகையாதே! வெற்றி உனதே!
யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்….” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிறங்கக் கட்டளையிட்டார் என்று பார்த்தோம். இன்று நாம் அந்த சம்பவத்தைத் தொடருவோம். பார்வோனின் அரண்மனையில் ஒரே பரபரப்பு! ஒரே ஆரவாரம்! ஏன்? கோஷேன் நாட்டிலிருந்து… Continue reading இதழ்: 1061 திகையாதே! வெற்றி உனதே!
இதழ்:1060 கனமகிமையை வெளிப்படுத்தும் வனாந்திரம்!
யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே…… சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. இதுவரை நாம் மோசேயின் வாழ்வைப்பற்றி படித்துக் கொண்டிருந்தோம். இனி நாம் இஸ்ரவேல் மக்களுடன் நம்முடைய பிரயாணத்தைத் தொடருவோம்! சில நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் நூல் சிக்கு ஆடி விடும். அப்படிப்பட்ட ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிக்கி இருக்கும் நுல்களை… Continue reading இதழ்:1060 கனமகிமையை வெளிப்படுத்தும் வனாந்திரம்!
