2 சாமுவேல் 7:1 கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது... நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை கர்த்தர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள அதிகாரங்களை படிக்கத் தூண்டினார். 2 சாமுவேல்… Continue reading இதழ்: 693 அவர் தரும் இளைப்பாறுதல்!
Category: Family Devotion
இதழ்: 692 நம்மைக் கொல்லும் தனிமை!
2 சாமுவேல் 6: 23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. தனிமை என்னைக் கொல்கிறது என்று சொல்லும் அநேகரைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் கொடுமையால் தனிமைக்குள் தள்ளப்பட்டவர்கள், பிள்ளைகளோடு வாழ மறுத்து தனிமையைத் தெரிந்து கொண்டவர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். இந்த அதிகாரத்தின் கடைசி வசனமாகிய இன்றைய வசனம் கூறுகிறது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு குழந்தை இல்லை என்று. மீகாள் என்ற பெயரின் அர்த்தம், ஒரு நீரோடை என்பதுதான். அவள் வாழ்க்கையில்… Continue reading இதழ்: 692 நம்மைக் கொல்லும் தனிமை!
இதழ்: 691 மெதுவான பிரதியுத்தரம் கோபத்தை மாற்றும்!
2 சாமுவேல் 6:21 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். என்னை யாராவது தீண்டி விட்டால் சும்மா இருக்கமாட்டேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா! தாவீதும் மீகாளும் அப்படிதான் இங்கு நடந்து கொண்டனர். என்னைப்பற்றி நீ அவதூறு சொன்னால் நான் மட்டும் சும்மா இருப்பேனா என்று தாவீதும் மீகாளிடம் பேசுவதை இன்றைய… Continue reading இதழ்: 691 மெதுவான பிரதியுத்தரம் கோபத்தை மாற்றும்!
இதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் என்னுடைய சிறிய வயதில் சங்கீதம் ஒவ்வொரு அதிகாரமாக படித்து ஒப்புவித்தால் மட்டுமே ஞாயிறு அன்று மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு கிடைக்கும். அதனால் சங்கீதங்களின் அர்த்தம் புரியாமலே மனப்பாடம் பண்ணுவேன். அப்படிப்பட்ட… Continue reading இதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்!
இதழ்: 689 வார்த்தை ஒரு கொடிய ஆயுதம்!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் இன்றைய வேத வசனத்தில் மீகாள் தாவீதின் மீது வீசும் கடுமையான வார்த்தைகளைப் பார்க்கிறோம். மீகாள் தாவீதை நேசித்து திருமணம் செய்தவள். அவளுடைய தகப்பனாகிய சவுல் தாவீதை வெறுத்தபோதும், அவளுடைய காதல் திருமணத்தால்… Continue reading இதழ்: 689 வார்த்தை ஒரு கொடிய ஆயுதம்!
இதழ்: 688 ஆசீர்வாதமான வார்த்தைகள்!
2 சாமுவேல் 6:20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது. 2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது. தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து… Continue reading இதழ்: 688 ஆசீர்வாதமான வார்த்தைகள்!
இதழ்: 687 குளிர்காயும் நேரத்தில் வீசப்படும் ஈரமான துணி!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் ( பிலி:4:4) என்கிறார். இது பவுல் சிறையிலிருந்து எழுதிய நிருபங்களில் நான்காவது என்றும்,… Continue reading இதழ்: 687 குளிர்காயும் நேரத்தில் வீசப்படும் ஈரமான துணி!
இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!
2 சாமுவேல்: 6:12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். 2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல்,… Continue reading இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!
இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!
2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்! தாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா.… Continue reading இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!
இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?
2 சாமுவேல் 6: 6,7 ....மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான், அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று! யாத்திராகமம் 25 - 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை… Continue reading இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?
