யோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது. தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:2227 கிறிஸ்துவுக்குள் ஒன்றான குடும்பம்!
Category: Family Devotion
இதழ்:2226 நேற்று கடந்து விட்டாலும் இன்று நம்மிடம் தானே இருக்கிறது!
மீகா 7: 18,19 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். நான் என்றாவது பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா? என்று சற்று யோசித்தேன்.… Continue reading இதழ்:2226 நேற்று கடந்து விட்டாலும் இன்று நம்மிடம் தானே இருக்கிறது!
இதழ்:2225 நம்மை திருப்தியாக்கும் பாதையை தெரிந்து கொள்!
சங்: 34:11,12 பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்? கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 - 170 வருடங்கள் வரை வாழும் என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது!… Continue reading இதழ்:2225 நம்மை திருப்தியாக்கும் பாதையை தெரிந்து கொள்!
இதழ்:2224 கர்த்தரே பதிற்செய்வேன் என்பதைக் கேள்!
2 சாமுவேல் 13: 23, 28, 29 இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் ...ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்......அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்...... அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள். அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக்… Continue reading இதழ்:2224 கர்த்தரே பதிற்செய்வேன் என்பதைக் கேள்!
இதழ்:2223 உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்திற்குள் இருக்க வேண்டும்!
2 சாமுவேல் 13: 21,22 தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள்… Continue reading இதழ்:2223 உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்திற்குள் இருக்க வேண்டும்!
இதழ்:2222 நம் வாழ்க்கை பிறர் வாசிக்கும் புத்தகம் போன்றதா?
2 சாமுவேல் 14:27 அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர் கொண்ட குமாரத்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவதியான் பெண்ணாயிருந்தாள். கடந்த சில நாட்கள் நாம் அம்னோன் தாமார் என்ற தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தாமாரைப்போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் நம்மில் உண்டு! அப்படிப்பட்டவர்களுக்கு தாமாரின் வாழ்க்கை என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று சற்று ஆழமாகப் படிக்கும்போதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு செழிப்பூட்டிய சில உண்மைகளைப் பார்த்தேன். தாமாரைப்பற்றி அதிகம் படிக்க எனக்கு ஆசை வந்ததின்… Continue reading இதழ்:2222 நம் வாழ்க்கை பிறர் வாசிக்கும் புத்தகம் போன்றதா?
இதழ்:2221 நிர்மூலமான உன் வாழ்க்கையை கட்ட வல்லவர்!
2 சாமுவேல் 13:20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப்பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு.அவன் உன்னுடைய சகோதரன். இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள். தாமாருக்கு பொல்லாப்பு இழைக்கப்பட்டது. அவளை உபயோகப் படுத்திய பின்னர் அம்னோன் அவளைத் தன் அறையிலிருந்து வெளியேற்றி கதவைப் பூட்டினான். அதுவரை கலகலப்பாக வாழ்ந்து கொண்டிருந்த ராஜகுமாரத்தியான தாமார் இப்பொழுது தனித்துக்… Continue reading இதழ்:2221 நிர்மூலமான உன் வாழ்க்கையை கட்ட வல்லவர்!
இதழ்:2220 கந்தலுக்கு பதிலாய் துதியின் ஆடையை கொடுப்பவர்!
2 சாமுவேல் 13: 17 - 19 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றான்..... அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள். இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை… Continue reading இதழ்:2220 கந்தலுக்கு பதிலாய் துதியின் ஆடையை கொடுப்பவர்!
இதழ்:2219 இந்த கசப்பான வலியும் தழும்பும் மாறுமா?
2 சாமுவேல் 13: 14-17 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்......அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும் இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்..... தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான். தாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய… Continue reading இதழ்:2219 இந்த கசப்பான வலியும் தழும்பும் மாறுமா?
இதழ்:2218 உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது?
2 சாமுவேல் 13:13 .... இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். வேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது! இன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் 'இதை நான் படித்ததே இல்லையே' என்று நினைத்த பகுதிகளில் ஒன்று! ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்! நேற்று நாம் அம்னோன்… Continue reading இதழ்:2218 உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது?
