2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்:1379 தாவீது எப்ரோனில் காத்திருந்த ஏழு வருடங்கள்!!!!
Category: Family Devotion
இதழ்:1378 உன் பாதையை நீ காண முடியாத வேளையில்!!!!
2 சாமுவேல் 2:1 - 10 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி, நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார். எவ்விடத்திற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்..... அப்பொழுது யூதாவின் மனுஷர்வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்..... சவுலின் படைத்தலவனான.... அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை.... இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்....யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள். சவுல் யுத்தத்தில் மரித்துப்போனான். அவனோடு… Continue reading இதழ்:1378 உன் பாதையை நீ காண முடியாத வேளையில்!!!!
இதழ்:1377 தன் ஆத்துமாவை ஏமாற்றிய சவுலின் முடிவு!
1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.....சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி..... நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் ஒரு திறமைசாலி! நேர்முகமான நோக்கம் கொண்டவன்! எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்! ஆனால் என்ன நடந்தது… Continue reading இதழ்:1377 தன் ஆத்துமாவை ஏமாற்றிய சவுலின் முடிவு!
இதழ்:1376 ஏமாற்றத்தால் பயம் மட்டுமே மிஞ்சும் !
1 சாமுவேல்28: 11 - 13 அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்....... ......தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் நம் தேவனாகிய கர்த்தர் நம்மை பாதுகாத்து வழிநடத்துமாறு ஜெபிப்போம். சவுல் இஸ்ரவேலை ஆளும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் ராஜா! எல்லோரையும் விட உயரமானவன்! கண்ணைக்கவரும் ஆணழகன்! இஸ்ரவேலர் எல்லோரும்… Continue reading இதழ்:1376 ஏமாற்றத்தால் பயம் மட்டுமே மிஞ்சும் !
இதழ்:1375 சிற்றின்பங்களை அள்ளித் தருபவன்!
1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ்:1375 சிற்றின்பங்களை அள்ளித் தருபவன்!
இதழ்:1374 பொல்லாங்கைத் தேடி போகாதே!
1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்பொழுது, குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டிலும் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம்… Continue reading இதழ்:1374 பொல்லாங்கைத் தேடி போகாதே!
இதழ்: 1373 கீழ்ப்படியாமை விளைவிக்கும் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 1373 கீழ்ப்படியாமை விளைவிக்கும் பயம்!
இதழ்:1372 658 இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக்கொள்!
1 சாமுவேல்: 30 : 8,18 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். போன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி போன்ற… Continue reading இதழ்:1372 658 இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக்கொள்!
இதழ்:1371 பயப்படாதே! மனுஷன் உனக்கு என்ன செய்வான்?
1 சாமுவேல் 30:6 தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீது தன்னுடைய அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையாலும் பொய் சொல்லி ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருந்த போது கொடிய சூழலில் முடிவடைந்தான் என்று நாம் பார்த்தோம். தாவீது யாரை உண்மையான நண்பர்கள் என்று நினைத்தானோ அவர்களே அவனைக் கல்லெறியத் துணிந்த நேரத்தில், தன் அன்பின் குடும்பமே சிறைப்படுத்தப் பட்டு காணாமற்போன வேளையில், அவன் எப்படி இருந்திருப்பான்? மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா? ஆம்! சிக்லாகில்… Continue reading இதழ்:1371 பயப்படாதே! மனுஷன் உனக்கு என்ன செய்வான்?
இதழ்:1370 எந்நிலையில் வந்தாலும் உதவி உடனே கிடைக்கும்!
1 சாமுவேல் 30: 3, 6 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.… Continue reading இதழ்:1370 எந்நிலையில் வந்தாலும் உதவி உடனே கிடைக்கும்!
