2 நாளாகமம்: 20 :18 , 19. அப்பொழுது யோசபாத் தரை மட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும், கர்த்தரைப் பணிந்து கொள்ளக் கர்த்தருக்கு முன்பாக தாழவிழுந்தார்கள் . கோகாத்தியரின் பத்திரரிலும் ,கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகாசத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் அவனுடைய குடிகளும், லேவியனான யகாசியேல் மூலமாக ஒரு அற்புதமான தேவ செய்தியை பெற்றார்கள் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்களுக்கு விரோதமாக… Continue reading இதழ்:2315 வெற்றிக்கு முன்னரே துதி ஸ்தோத்திர பலியிடு!
Category: Tamil Bible study
இதழ்:2314 நீ சற்று அமர்ந்திரு!
2 நாளாகமம் 20 : 17 இந்த யுத்தத்தை பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பை பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் ;நாளைக்கு அவர்களுக்கு எதிராக புறப்படுங்கள் ;கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான். நேற்று நாம் தேவனாகிய கர்த்தர் ராஜாவாகிய யோசபாத்தையும் , யூதா மக்களையும் தைரியமாய் எதிரிகளை சந்திக்க புறப்பட்டு வனாந்தரத்துக்கு செல்லும்படி கூறியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்ல தேவன் யுத்தம் நடக்கும்… Continue reading இதழ்:2314 நீ சற்று அமர்ந்திரு!
இதழ்:2313 நாம் செல்லும் பாதையை அறிந்த நம் மாலுமி!
2 நாளாகமம் 20: 16 நாளைக்குநீங்கள்அவர்களுக்கு விரோதமாய்போங்கள்; இதோஅவர்கள் சிஸ் என்னும்மேட்டுவழியாய்வருகிறார்கள்; நீங்கள்அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டுசந்திப்பீர்கள். நான் வர்ணம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மூலமாக படங்கள் வரையக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பென்சில் மூலமாக (Pencil Drawings) ஒரு அருமையான படத்தை வரைந்தேன். அது மிகவும் அழகாக வந்ததினால் எங்கள் வீட்டில் அதை ஃபிரேம் செய்து மாட்டியிருந்தோம். அந்தப் படத்தில் அலைக்கழிக்கும் அலைகள் மத்தியில் ஆடிக்கொண்டிருந்த படகில் இயேசு கிறிஸ்து மாலுமியாக நிற்பது… Continue reading இதழ்:2313 நாம் செல்லும் பாதையை அறிந்த நம் மாலுமி!
இதழ்:2312 நம் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை!
2 நாளாகமம்: 20:14,15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நேற்று நாம் ராஜாவகிய யோசபாத்தைப் பற்றிப்படிக்க ஆரம்பித்தோம். அவனுக்கு , மோவாப் புத்திரர், அம்மோன் புத்திரர், அம்மோனியருக்கு அப்புறம் உள்ள மனுஷர் என்ற முப்படைகளின் தாக்குதல் வந்தது என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல ராஜா பயந்து தேவனுடைய சமூகத்தைத் தேடினான் என்று பார்த்தோம்.… Continue reading இதழ்:2312 நம் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை!
இதழ்:2311 பயம் நம்மை அடிமையாக்கும்! விசுவாசமே நம்மை விடுவிக்கும்.
2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2… Continue reading இதழ்:2311 பயம் நம்மை அடிமையாக்கும்! விசுவாசமே நம்மை விடுவிக்கும்.
இதழ்:2310 ஜெபம் என்பது தேவன் உன்னை சந்திக்கும் இடம்!
யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது. கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு… Continue reading இதழ்:2310 ஜெபம் என்பது தேவன் உன்னை சந்திக்கும் இடம்!
இதழ்:2309 மிகச் சாதாரணமான ஓர் மண்பாண்டம் நான்!
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி, நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று கூறுகிறது. இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம், வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே… Continue reading இதழ்:2309 மிகச் சாதாரணமான ஓர் மண்பாண்டம் நான்!
இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிக் கொண்டிருந்த வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் எலியாவின் வாழ்க்கையை மறுபடியும் கண்ணோக்கி விட்டு, எலிசாவின் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப்… Continue reading இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
