1 இராஜாக்கள் 10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் கேள்விகணைகளைத் தொகுத்து அதற்கு விடைகளையும் அறிந்தபின்னர், இஸ்ரவேல் முழுவதும் சுற்றிப்பார்க்கிறாள். சாலொமோன் கட்டின தேவாலயத்தின் பிரம்மாண்டத்தையும், தாவீதின் நகரத்தையும் சுற்றிப் பார்த்தபின்னர் அவள் முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய அறிவின் கூர்மையைக் காண்பிக்கின்றன!… Continue reading இதழ்:2284 தேவனின் நற்குணத்தை பிரதிபலி!
Category: Tamil Bible study
இதழ்:2283 தலைமுறையாய்த் தொடரும் ஆசீர்வாதம்!
1 இராஜாக்கள் 10:8-9 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் , எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய அழகிய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வருகிறாள். அவளுடைய கடினமான விடுகதைகளால் சாலொமோனை சோதித்த பின்னர், தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அளித்திருந்த ஞானத்தையும், அவனுடைய ராஜ்யத்தின் செழிப்பையும், அங்கு காணப்பட்ட ஒழுங்கு முறைகளையும் தன்னுடைய கண்ணாரக்… Continue reading இதழ்:2283 தலைமுறையாய்த் தொடரும் ஆசீர்வாதம்!
இதழ்:2282 நீங்களும் ருசி பாருங்களேன்!
1 இராஜாக்கள் 10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்.... இன்றைய வேதாகமப் பகுதி எனக்கு ரோமர் 14:5 ல் , ..அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு கூறியது நினைவுக்கு வந்தது. இதை என்னிடம் பிரித்து எழுதும்படி சொன்னால் இப்படித்தான் எழுதுவேன், 'வேதாகமத்தை வாசி, ஆழமாகப் படி, அதைக் கற்றுக்கொள், உன் உள் மனதில் நிச்சயமாய் விசுவாசி!'… Continue reading இதழ்:2282 நீங்களும் ருசி பாருங்களேன்!
இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!
1 இராஜாக்கள்10: 4-5 சேபாவின்ராஜஸ்திரீசாலொமோனுடையசகலஞானத்தையும், அவன்கட்டினஅரமனையயும், அவன்பந்தியின்போஜனபதார்த்தங்களையும், அவன்ஊழியக்காரரின்வீடுகளையும், அவன்உத்தியோகஸ்தரின்வரிசையையும்,அவர்கள்வஸ்திரங்களையும், அவனுடையபானபாத்திரக்காரரையும், அவன்கர்த்தருடையஆலயத்துக்குள்பிரவேசிக்கும்நடைமண்டபத்தையும்கண்டபோதுஅவள்ஆச்சரியத்தால்பிரமைகொண்டு, சேபாவின் ராஜஸ்திரீயை பற்றியல்லவா படித்துக் கொண்டிருக்கிறோம்! ஒரு நிமிடம் நம்மை சேபாவின் ராஜஸ்திரீயின் இடத்தில் வைத்து கற்பனை செய்வோம். உலகம் போற்றும் மிகுந்த ஞானமும், செல்வமும் உள்ள சாலொமோனின் அழகிய அரமனைக்குள் நடந்து கொண்டிருக்கிறோம்.....கட்டடங்களும், கண்ணைகவரும் மரவேலைகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன! சாலொமோனோடு பந்தியில் அமருகிறோம். அப்பப்பா எத்தனை வரிசை! எத்தனை விதமான உணவு! அதை பரிமாறும் விதம்! அந்த ஊழியரின்… Continue reading இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!
இதழ்:2280 உம் பாதம் அமர்ந்து கற்றுக் கொள்ளும் மறைபொருள்!
1 இராஜாக்கள் 10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராஜஸ்திரீயைப்பற்றி சில நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஒரு அராபிய நாட்டை சேர்ந்தவள். சாலொமோனையும் அவனோடு இணைந்திருந்த தேவனுடைய நாமத்தையும் அறிய வேண்டி எருசலேமுக்கு வந்தவள். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, அவள் சாலொமோனிடம் அநேக காரியங்களை கேட்டறிந்தாள் என்று பார்க்கிறோம். படிப்பும், ஞானமும் ஆண்களுக்கே உரித்தான அந்த காலகட்டத்தில், இந்தப் பெண் அநேக ஆழமான கேள்விகளோடு… Continue reading இதழ்:2280 உம் பாதம் அமர்ந்து கற்றுக் கொள்ளும் மறைபொருள்!
இதழ்:2279 கொடுக்க ஆரம்பி அதின் ஆசீர்வாதம் தெரியும்!
1 இராஜாக்கள் 10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள் சாலோமோனின் ஞானத்தையும், அதன் மூலம் மகிமைப்படும் கர்த்தருடைய நாமத்தையும் பற்றி நேரில் கண்டு அறிந்துகொள்ளவே சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய பரிவாரத்தோடு புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி அவள் வெறுங்கையோடு வரவில்லை , விலையேறப்பெற்ற பரிசுகளோடு வந்தாள் என்று கூறுகிறது. அவள் வாழ்ந்த காலத்தில் சேபா ஒரு வளம்பெற்ற ராஜ்யமாக இருந்தது. வெள்ளைப்போளமும், தூபவர்க்கமும் அவர்களுடைய… Continue reading இதழ்:2279 கொடுக்க ஆரம்பி அதின் ஆசீர்வாதம் தெரியும்!
இதழ்:2278 கர்த்தருடைய நாமத்தினால் கிடைத்த கீர்த்தி!
1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, இன்றிலிருந்து ஒரு பத்து நாட்கள் நாம், மிகவும் பிரசித்தமான இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனை நேரில் பார்க்க புறப்பட்டு வந்த வெளிநாட்டு ராணியைப் பற்றி படிக்கப் போகிறோம். இந்த ராணியின் வாழ்க்கை மூலமாக தேவன் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் என்று பார்க்கும் முன்னர் நான் படித்த, அறிந்து கொண்ட சிலவற்றை உங்கள் முன்… Continue reading இதழ்:2278 கர்த்தருடைய நாமத்தினால் கிடைத்த கீர்த்தி!
இதழ்: 2277 அதிகமாய் அறிந்து கொள்ள வாஞ்சை!
1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, சேபாவின் ராஜஸ்திரீ என்ற பட்டப்பெயர் கொண்ட பெண் அவள். வேதாகம வல்லுநர்கள் அவளை தெற்கத்திய ராஜஸ்திரீ என்றும் கூறுகிறார்கள் ஏனெனில் சேபா ஒரு தெற்கத்திய நாடு. அவள் எங்கிருந்து வந்தாள் என்பது முக்கியம் அல்ல, அவள் எதற்காக வந்தாள் என்று பார்ப்போம். சேபாவின் ராஜஸ்திரீ , கர்த்தருடைய நாமத்தைக் குறித்து சாலொமோனுக்கு உண்டான கீர்த்தியைப்… Continue reading இதழ்: 2277 அதிகமாய் அறிந்து கொள்ள வாஞ்சை!
இதழ்:2276 அனைத்துமே அவர் அளித்த ஈவுதானே!
2 நாளாகமம் 1:15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கடந்த மாதம் முழுவதும் கண்மணி போலக் காத்த தேவன் இந்த மாதமும் நம்மைப் பாதுகாத்து நடத்துமாறு ஜெபிப்போம். கடந்த நாட்களில் இராஜாக்களின் புத்தகத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள நாளாகமத்தையும் வாசித்தேன்.வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது தேவனுடைய கிரியைகளின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது, சாலொமோன்… Continue reading இதழ்:2276 அனைத்துமே அவர் அளித்த ஈவுதானே!
இதழ்:2275 அவரின் பேரன்பு அருளும் மனமகிழ்ச்சி!
1 இராஜாக்கள் 8:52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக..... 8:66 எட்டாம் நாளில் ஜனங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்கு போய்விட்டார்கள். சாலொமோன் வாக்குத்தத்தின் பிள்ளை. தன்னுடைய வயதுக்கு மீறிய ஞானத்தை கர்த்தரின் அருளால் பெற்றவன்.… Continue reading இதழ்:2275 அவரின் பேரன்பு அருளும் மனமகிழ்ச்சி!
