நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading இதழ்: 1938 விசாலமான வாசல் கேட்டுக்குள் வழி நடத்தும்!
Category: Tamil Christian Families
இதழ்:1937 கீழ் நோக்கி செல்லும் பயணமா?
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். ஒருமுறை முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றோம்.… Continue reading இதழ்:1937 கீழ் நோக்கி செல்லும் பயணமா?
இதழ்:1936 மன்னித்தல் என்பது ஒரு கைதி விடுபடுதல் போன்றது!
நியாதிபதிகள்: 11: 39,40 ” இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று, நினைப்பதும் , மறப்பதும் , என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால்… Continue reading இதழ்:1936 மன்னித்தல் என்பது ஒரு கைதி விடுபடுதல் போன்றது!
இதழ்:1935 துருத்தியில் வைக்கப்படும் உன் கண்ணீர்!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின்… Continue reading இதழ்:1935 துருத்தியில் வைக்கப்படும் உன் கண்ணீர்!
இதழ்:1934 நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை உண்டு!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே… Continue reading இதழ்:1934 நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை உண்டு!
இதழ்:1933 உன் துக்கத்தை சுமக்கும் நல்ல நட்பு உண்டா?
நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நாட்களில், அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படும் அல்லவா! ஒவ்வொருத்தரின் கரங்களில் பல கயிறுகள் கட்டப்பட்டு தங்களுடைய நட்பை பெருமையோடு வெளிப்படுத்துவார்கள். எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு… Continue reading இதழ்:1933 உன் துக்கத்தை சுமக்கும் நல்ல நட்பு உண்டா?
இதழ்:1931 துணிந்து விசுவாசி! வெற்றி உண்டு!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்:1931 துணிந்து விசுவாசி! வெற்றி உண்டு!
இதழ்:1930 உம்முடைய சத்தியத்தினாலே என்னை பரிசுத்தமாக்கும்!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பற்பல நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது கர்த்தருடைய வழி நடத்துதலுக்காகவும் , பாதுகாப்பிற்காகவும் என் உள்ளம் அவரை நன்றியால் ஸ்தோத்தரிக்கும் அதே வேளையில், இந்தப் புதிய வருடம் 2024 நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் வருடமாக அமையவேண்டுமென்று என் உள்ளம் ஜெபத்தையும் ஏறெடுக்கிறது !… Continue reading இதழ்:1930 உம்முடைய சத்தியத்தினாலே என்னை பரிசுத்தமாக்கும்!
இதழ்:1929 உன்னை அறிந்தவரிடம் உன்னை முற்றிலுமாய் ஒப்புவி!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை இந்தப் பகுதியில் வாசிக்கிறோம். இன்றைக்கு நாம்… Continue reading இதழ்:1929 உன்னை அறிந்தவரிடம் உன்னை முற்றிலுமாய் ஒப்புவி!
இதழ்:1928 தனித்து நின்றாலும் சோர்ந்து போகாதே!
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். நாம் இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம்! இன்றைய வேத வசனத்தைப் பாருங்கள்! கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று நமக்கு தெளிவாக காட்டுகிறது! இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம்.கோலியாத் தன்னுடைய பட்டயத்தோடும்,… Continue reading இதழ்:1928 தனித்து நின்றாலும் சோர்ந்து போகாதே!
