2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு… Continue reading இதழ்:2197 எதை விதைத்திருக்கிறாய் என்று அறிவாயா?
Category: Tamil Christian Families
இதழ் 2196 ஏன் என்னை இப்படி கேவலப்படுத்துகிறாய்!
2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை! ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால்,… Continue reading இதழ் 2196 ஏன் என்னை இப்படி கேவலப்படுத்துகிறாய்!
இதழ்:2195 நீ பெற்றுக் கொண்டது போதாதா?
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது… Continue reading இதழ்:2195 நீ பெற்றுக் கொண்டது போதாதா?
இதழ்:2194 உனக்கும் இந்த உதவி தேவையா????
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி..... நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா? அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை! அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்! யோபு 38:31ல் ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை… Continue reading இதழ்:2194 உனக்கும் இந்த உதவி தேவையா????
இதழ்:2193 வலையில் சிக்கிய உன்னை விடுவிப்பார்!
2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன் தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா, அவன் மகா வல்லமையுள்ளவனாய் இருந்தான்! அன்றைய தினம்,அரண்மனைக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின்… Continue reading இதழ்:2193 வலையில் சிக்கிய உன்னை விடுவிப்பார்!
இதழ்:2192 தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே கூடும்!
2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு… Continue reading இதழ்:2192 தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே கூடும்!
இதழ்:2191 கிருபையை நினைத்து நன்றியால் ஸ்தோத்தரி!
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். ராஜாவாகிய தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட வேண்டும் என்று நினைத்தான்… Continue reading இதழ்:2191 கிருபையை நினைத்து நன்றியால் ஸ்தோத்தரி!
இதழ்:2190 A VERY BLESSED AND HAPPY NEW YEAR 2025!
யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” பல ஆண்டுகளுக்கு முன்னர் நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம். இப்பொழுதெல்லாம் புதிய கார்கள் GPS பொருத்தப்பட்டே வருகின்றன. ஆனால் அப்பொழுதெல்லாம் அப்படியல்ல. நாங்கள் எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவியை வாங்கி பொருத்தியிருந்தோம். ஒருநாள் நாங்கள்… Continue reading இதழ்:2190 A VERY BLESSED AND HAPPY NEW YEAR 2025!
இதழ்: 2189 நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கர்த்தரிடம் கொடு!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பழைய ஏற்பாடு என்றால் மிகவும் பிரியம். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! நமக்கு இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி… Continue reading இதழ்: 2189 நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கர்த்தரிடம் கொடு!
இதழ்:2188 புதைக்கப்பட வேண்டிய தாலந்து எது தெரியுமா?
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்தப் பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி.... நீ யாருடைய தவறையாவது சீர்திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1)என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம்… Continue reading இதழ்:2188 புதைக்கப்பட வேண்டிய தாலந்து எது தெரியுமா?
