நியா: 4: 17 “சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.” வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன! இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், ” தலைப்புச் செய்திகள்… சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!”… Continue reading இதழ்: 1164 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்!
Category: To the Tamil Christian community
இதழ்: 1163 உம்முடைய பெலத்தால் என்னை பெலப்படுத்தும்!
நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.” நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading இதழ்: 1163 உம்முடைய பெலத்தால் என்னை பெலப்படுத்தும்!
இதழ்: 1162 சர்வ வல்ல தேவன் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று… Continue reading இதழ்: 1162 சர்வ வல்ல தேவன் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
இதழ் 1161 கர்த்தர் உனக்கு முன்பாக செல்கிறார்!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள். இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம். இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும்,… Continue reading இதழ் 1161 கர்த்தர் உனக்கு முன்பாக செல்கிறார்!
இதழ்: 1160 இன்று உனக்கு விடுதலையின் நாள்!
நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “ இன்ற புதிய மாதத்தைக் காணச் செய்ய உதவி செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம்! கொரொனா தொற்று இரண்டாம் அலையாக அதிகமாக பரவும் இந்த நாட்களில் கர்த்தருடைய பாதுகாப்புக்காக ஜெபிப்போம்! அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு!… Continue reading இதழ்: 1160 இன்று உனக்கு விடுதலையின் நாள்!
இதழ்: 1159 யார்தான் போவார் எனக்காக என்றழைக்கும் நேசரின் சத்தம்!
நியாதிபதிகள் : 4: 9 “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடே காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியாகிய தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading இதழ்: 1159 யார்தான் போவார் எனக்காக என்றழைக்கும் நேசரின் சத்தம்!
இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?
நியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. நம்முடைய அணியின் வெற்றிக்கு, சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும்… Continue reading இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?
இதழ்: 1157 நீ தேவனுடைய பணிக்காக அர்ப்பணிக்கும் நேரம்?
நியாதிபதிகள்: 4:5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.” இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார். இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று… Continue reading இதழ்: 1157 நீ தேவனுடைய பணிக்காக அர்ப்பணிக்கும் நேரம்?
இதழ்: 1156 உன்னாலும் தீவட்டி போல ஒளி வீச முடியும்!
நியாதிபதிகள்: 4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.” நாம் இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம். தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள். தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி… Continue reading இதழ்: 1156 உன்னாலும் தீவட்டி போல ஒளி வீச முடியும்!
இதழ்: 1155 கீழ்ப்படிதலை மட்டும் விரும்பும் தேவன்!
நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்? நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம். சரிவர வழிநடத்தத் தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர்.… Continue reading இதழ்: 1155 கீழ்ப்படிதலை மட்டும் விரும்பும் தேவன்!
